Wednesday 11 December 2013

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய முடியும்?

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மக்களின் பேராதரவோடு வெற்றிபெற்ற கே.தங்கவேல் - சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆற்றிவரும் பணிகள் குறித்தும், முன்வைத்து எழுப்பிவரும் கோரிக்கைகள் குறித்த சிறு அறிமுகமே இப்பிரசுரம்.

‘சட்டத்தின் ஆட்சி’ நடப்பதாக சொல்லப்படும் இந்திய ஜனநாயகத்தில் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் உயர்ந்த அதிகாரம் பெற்ற அமைப்புகளாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் உரிய முறையில் விவாதங்களை நடத்தில், சட்டங்களையும், திட்டங்களையும் சீர்தூக்கிப் பார்த்து - மக்கள் நலன்களின் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே - ஜனநாயகம் தழைத்தோங்கும். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மேற்கொள்ளும் விவாதங்கள் வழிவகுக்கின்றன.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் விவாதத்திற்கு வாய்ப்பளிக்காமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுவது அதிகரித்த காலத்தில், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்துகிறோம். அதன் அடிப்படையில் செயல்படும் நமது சட்டமன்ற உறுப்பினர் - கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பயனுள்ள விவாதங்களை முன்வைக்கிறார்.

மக்களுக்கு பாதகமான முடிவுகளை அரசு மேற்கொள்ளும்போது, போராட்டங்கள் வெடிக்கின்றன. அத்தகைய சூழல்களில் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துரைப்பவராகவும் நமது சட்டமன்ற உறுப்பினர் செயல்பட்டு வந்திருக்கிறார்.

சாயத் தொழில் பிரச்சனை:

2011 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் சாயப்பட்டறை பிரச்சனையும், பனியன் தொழில் நெருக்கடியும் முக்கியப் பிரச்சனைகளாக இருந்தன. ஆளுனர் உரையில் (2011 ஜுன் 6 -9) இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படாத போது, தனது கன்னிப் பேச்சிலேயே அவற்றை சுட்டிக்காட்டியதுடன். அனைத்து தரப்பினரும் பங்கேற்ற மனித சங்கிலிப் (ஜூலை 22) போராட்டத்திலும் சட்டமன்ற உறுப்பினர் பங்கெடுத்தார். செப்.18 ஆம் தேதி நடந்த கலந்தாய்வில் உரிய தீர்வுகளை முன்வைத்து மீண்டும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்ட அரசு பின்னர் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்க அனுமதியளித்ததையும், ரூ.200 கோடி வரை மானியமாக அறிவித்ததையும் நாம் அறிவோம்.

விசைத்தறி மின் கட்டணம்:கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள்  மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடியபோதும், அவர்களின் கோரிக்கையை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்த்தார். விசைத்தறியாளர்களின் உறுதியான போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த தமிழக அரசு மின் கட்டணத்தை திருத்தி அறிவித்தது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு, விசைத்தறியாளகளுக்கு மட்டுமே திருத்தி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. தமிழகத்தில் நலவாரிய ஓய்வூதியத் தொகை ரூ.1000 ஆக உயர்த்தப்பட்ட போது, நெசவாளர்களுக்கு அது உயர்த்தப்படவில்லை. இதில் தலையீடு செலுத்தியதால் ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டது.

விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனும், நமது சட்டமன்ற உறுப்பினரும் விவசாயிகளின் தரப்பு நியாயங்களை பிரதிபளித்தனர். இதுபோல, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் சொல்லும் - எளிய மக்களின் குரலாக அவர்கள் செயல்படுகின்றனர்.

(எம்.எல்.ஏ பணிகள் - பிரசுரம்)
  1. சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய முடியும்?

  2. கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களால் மட்டும் எப்படி ஊழலின்றி செயல்பட முடியும்?

  3. மக்கள் சந்திப்பு பயணங்கள் ... (இரண்டாண்டு பணிகள் பிரசுரம்)

  4. திருப்பூருக்காக வாதாடிய எம்.எல்.ஏக்கள் ...

  5. பட்டா மற்றும் குடியிருப்பு பிரச்சனைகள்...

  6. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 1

  7. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 2

  8. அவசர பிரச்சனைகளில் நேரடித் தலையீடு ...

  9. மறக்க முடியுமா? ... திருப்பூர் வெள்ளம் 2011...

  10. தொகுதி நிதி ஒதுக்கீடு ...

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)