Monday 14 July 2014

தாதுமணல் கொள்ளை: அறிக்கை வெளியிட அரசுக்கு அச்சமா? - கே.தங்கவேல் MLA கேள்வி

சென்னை, ஜூலை 14-கல்குவாரி முறைகேடு கள் குறித்த ஆய்வறிக்கையை தமிழக அரசு பகிரங்கமாக வெளியிடாமல் இருப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே. தங்கவேல் கேள்வி எழுப்பினார். 

தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் தில் திங்களன்று (ஜூலை 14) தங்கவேல் பேசியது வருமாறு:

தங்கவேல்: தென்மாவட் டங்களில் தொழில் வளர தே வையான கட்டமைப்பு வசதிக ளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறை வேற்றுவது அவசியம். மேலும், தமிழகத்தில் உள்ள தனியார் கனிம வள நிறுவனங்கள், இந் தியாவிலேயே அதிக அளவில் கனிமங்கள் எடுத்து ஏற்றுமதி செய்துள்ளன. அந்த நிறுவனங் கள் கனிம வளங்களை விதி களை மீறியும் சுரண்டியுள் ளன. இது தொடர்பாக முத லில் தூத்துக்குடி, திருநெல் வேலி, கன்னியாகுமரி, திருச்சி மற்றும் மதுரை மாவட் டங்களில் உள்ள குவாரிக ளில் ஆய்வு நடத்த முதல மைச்சர் உத்தரவிட்டார். இந்த முறைகேடுகளின் மதிப்பு லட்சம் கோடிகளில் இருக்கலாம் என்ற செய்தி நம்மை அச்சுறுத்துகிறது. அர சுத் தரப்பில் ஆய்வுகள் முடிந்த பிறகும், ஆய்வறிக்கை விபரங்கள் ரகசியமாக உள் ளன.
ஒருபக்கம் அரசுக்கு இழப்பையும், மறுபக்கம் சுற் றுச் சூழல் பாதிப்பையும் ஏற்ப டுத்தியிருக்கும் அந்த முறை கேடுகளை மக்களுக்கு பகிரங் கப்படுத்த அரசு ஏன் அஞ்சு கிறது?கனிம மணல், கிரானைட் கற்கள் மற்றும் ஆற்று மணல் கொள்ளைகளில் ஈடுபட்டுள் ளவர்களை சட்டப்படி தண் டிப்பதுடன், அரசுக்கு ஏற்பட் டுள்ள இழப்பை கறாராக வசூ லிக்க வேண்டும். இத்துறை களில் தனியார் ஈட்டும் லாபம் பல்லாயிரம் கோடியாக இருக் கிறது. அரசு கனிம நிறுவனங் களின் லாபமோ சில நூறு கோடிகளில் மட்டுமே இருக் கிறது. 2023-ம் ஆண்டு வரை தொலைநோக்குத் திட்டம் வகுத்து செயல்படும் அரசு, வேலைவாய்ப்பையும், உற்பத்தியையும் பெருக்கும் திட்டங்களுக்காக நிதி இல்லா மல் தவிக்கிறது. மறுபக்கம் நமது இயற்கை வளங்கள் வரன்முறையற்று சுரண்டப் படுகின்றன. சிலரது கைகளி லேயே இருக்கும் கனிம, இயற் கைவள வர்த்தகத்தை அரசு டைமையாக்கி, உள்நாட்டிலே யே தொழிற்சாலைகளை ஏற்ப டுத்துவதன் மூலம், ஏற்றுமதி யைக் கட்டுப்படுத்தினால், தொழில் ஆதாரங்களைபெருக் கலாம், இது குறிப்பாக தென் மாவட்டங்களை மேம்படுத் தும்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)