Wednesday 16 July 2014

தமிழ்நாடு, 'இந்தியாவின் டெட்ராய்ட்' ஆகிவிடக் கூடாது: எம்.எல்.ஏ எச்சரிக்கை !

தொழில்துறை விவாதத்தில் எம்.எல்.ஏ தங்கவேல் பேசியது ...

கே.தங்கவேல்: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தொழில் நிறுவனங்களை ஈர்த்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறது. அவற்றில் கனிசமான அந்நிய நிறுவனங்கள் உள்ளன.

அதிகம் நகர்மயமாகி, "இந்தியாவின் டெட்ராய்ட்" என்று பெயரெடுக்கும் விதத்தில் தமிழகம் உள்ளதாக சென்ற ஆண்டின் கொள்கைக் குறிப்பு பெருமிதத்துடன் தெரிவித்தது. இந்த ஆண்டுக் குறிப்பில் அந்த வாசகம் இல்லை.

ஏனென்றால், அமெரிக்காவின் தொழிற்சாலை நகரமான டெட்ராய்ட் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அங்கு செயல்படும் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இடம்மாற்றவும், பல்லாயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளன. அமெரிக்க அரசு தலையிட்டு, அந்த நகரை பழைய நிலைக்கு மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவிலும், மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் சலுகைகளை அனுபவிக்கின்றன. சலுகைக் காலம் முடிந்ததும், மீண்டும் சலுகைகளைத் தேடி வேறு மாநிலத்திற்கு மாறிச் செல்ல தடையேதுமில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பதும், அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது.

சென்றமுறை இதுகுறித்து பேசிய  அமைச்சர் , ஆந்திரமும் பிற மாநிலங்களும் நம்மை விட கூடுதலான சலுகைகள் கொடுத்து, முதலீட்டை ஈர்க்க முயல்கின்றன என்றும், அதனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை கொடுக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் சட்டங்கள் அதற்கு ஏதுவாகத்தான் இருக்கின்றன.  அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் போன்ற நிலை தமிழகத்திற்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், அந்நிய மூலதனத்திற்கும், தனியார் பெரு நிறுவனங்களுக்கும் அவசியமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)