Wednesday 16 July 2014

நோக்கியாவின் மாபெரும் முறைகேடு: சட்டசபையில் அம்பலப்படுத்திய எம்.எல்.ஏ !

திங்களன்று, தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற தொழில்துறை விவாதத்தில் ...

கே.தங்கவேல்: முதலீடு காரணமாக வேலைவாய்ப்புகள் பெருகினால், அது மகிழ்ச்சிக்குரியது. அதன் பெயரால் அரசின் சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட வேண்டும், இத்தனை பேருக்கு வேலை வழங்க வேண்டுமென நிபந்தனை விதிக்க முடியாதென்றால், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எப்படி ஏற்படும்?

அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த விபரங்கள் வெளிப்படையாக இல்லை. தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் புரியாத ஒப்பந்தங்களாகவே அவை இருக்கின்றன. இதனால் சலுகைசார் முதலாளித்துவம் வளர்கிறது. தவறுகளுக்கு வழி ஏற்படுகிறது.
தொழில்துறை அமைச்சர் தங்கமணி: தமிழகத்தில் முதலீடு செய்யமுன்வரும் தொழில் நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் போது இவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என்று விதிகளையும் சேர்த்துள்ளோம். அதில் ஒருவருக்கு வேலை தரமறுத்தால் கூட அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்பப்பெற்றுக்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல உள்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்தாலும் சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக தென்மாவட்டங்களில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்கள் ரூ.5கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை முதலீடு செய்தாலும் சலுகைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். போட்டி நிறைந்த உலகில் நிறுவனங்களை ஈர்க்க பல சலுகைகளை அளிக்கவேண்டியுள்ளது.
கே.தங்கவேல்: ஸ்ரீபெரும்புதூரில் தொழில் தொடங்கிய நோக்கியா நிறுவனம், தமிழக அரசிடமிருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளும், மத்திய அரசிடமிருந்து ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் மதிப்பில் சலுகைகளும் பெற்றனர். முதல் ஐந்தாண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபமீட்டினர். அத்தோடு அல்லாமல், சுமார் 23 ஆயிரம் கோடி வரி இழப்பையும் ஏற்படுத்தி, பின் அதன் காரணமாக தொழிற்சாலையை முடக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர்.
அமைச்சர் தங்கமணி: நோக்கியா நிறுவனத்திற்கு  தமிழக அரசு 3000 கோடி ரூபாய் அளவுக்கு சலுகைகள் வழங்கியுள்ளதாக உறுப்பினர் கூறுகிறார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கூறப்பட்டுள்ள சலுகைகளை தவிர ஒரு ரூபாய் கூட அதிகமாக அந்த நிறுவனத்திற்கு சலுகைகள் வழங்கப்படவில்லை.
கே.தங்கவேல்: 650 கோடி ரூபாய் முதலீடு செய்த நோக்கியா சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் பெற்றது. தற்போது தன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கைமாற்றிவிட்டது. நம்பிக்கையோடு பணிக்குச் சேர்ந்த தொழிலாளர்களுக்கோ, 25 வயதில் விருப்ப ஓய்வு வழங்கப்படுகிறது என்றால் - நாம் அடைந்த பலன் என்ன?
வெள்ளியன்று நடைபெற்ற விவாதத்தில்  தொழில்துறை அமைச்சர் முந்தய காங்கிரஸ் அரசின் சதியால் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதாகத் தெரிவித்தார். புது தில்லி, உயர்நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில், நோக்கியா செய்த முறைகேடுகள் உறுதியாகியுள்ளதை அவரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 9 தொழிற்பூங்காக்களை ஏற்படுத்த முடிவு செய்தபோதும் அங்கு முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை. தற்போது,  கூடுதல் சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை வாங்கவும், பெண் தொழிலாளர்களை இரவுப் பணிக்கு அமர்த்தவும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை பின்பற்றவும் அனுமதிப்பது என தொழிலாளர் நலன்களில் சமரசம் செய்கிறது. சலுகைகள் கொடுப்பதால் வரும் முதலீடு நிரந்தரமானதா? தமிழக மக்களுக்கு அது நலன் தருமா? - ஒரு பானை சோற்றுக்கு நோக்கியா ஒரு பதம்!.
அ.சவுந்தரராசன்: நோக்கியா நிறுவனத்திற்கு இது வரை தமிழக அரசு சலுகைகள் தரவில்லை என்றாலும் அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசிடமிருந்து வரவேண்டிய சலுகைகள் 650கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்த சலுகையை அந்த நிறுவனம் எப்போது வேண்டுமானலும் தமிழக அரசிடம் பெற்றுக்கொள்ளமுடியும். இதைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம். மேலும் நோக்கியா நிறுவனத்தின் பிரச்சனையில் தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என்ற மாநில அரசின் நிலைப்பாட்டையும் நாங்கள் ஏற்கவில்லை.
அமைச்சர் தங்கமணி: நோக்கியா நிறுவனம் 95 கோடி ரூபாய்க்கு மாநில அரசிடம் ஈசி கொடுத்துஇருக்கிறார்கள். அது உண்மைதான்.
 
அ. சவுந்தரராசன்: நோக்கியா நிறுவனத்தில்வேலை செய்த 8 ஆயிரம் பேர் வேலை பறிபோயுள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு பொறுப்பு இல்லையா? இந்தப் பிரச்சனையில் தலையிடுமாறு தொழிலாளர் நலத்துறைக்கும் மாநில முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. அதனால் தான் இங்கே அந்த பிரச்சனையை கூறவேண்டியுள்ளது. இவ்வாறு இந்த விவாதம் நடைபெற்றது.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)