Monday 14 July 2014

விளை நிலங்களை எடுக்காமல் தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்: கே.தங்கவேல் MLA

சிவரக்கோட்டையில் உள்ள வளமான விளைநிலம்.நன்றி -கீற்று.
சிவரக்கோட்டையில் ‘சிப் காட்’ அமைப்பதை விவசாயி கள் தொடர்ந்து எதிர்த்து வரு கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் இப்பிரச்சனை மன்றத்தில் பலமுறை எழுப் பப்பட்டுள்ளது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வாக்குறு தியளித்த பிறகும், அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை இதுவரை ரத்து செய்யப்பட வில்லை. அதற்காக நியமிக் கப்பட்ட வட்டாட்சியரையும் விலக்கிக்கொள்ளவில்லை. முந்தைய அரசு பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

விளை நிலங்களை எடுக் காமல் தரிசு நிலத்தில் ‘சிப் காட்’ தொழிற்பேட்டைகள் ஏற் படுத்துவோம் என்ற உறுதி யை அரசு பின்பற்ற வேண் டும். விளை நிலங்களை கைப் பற்ற நேர்ந்தால் உரிய இழப் பீடு வழங்குவதுடன் விவசா யத் தொழிலாளர்கள் வேலை இழப்பதைக் கணக்கில் கொண்டு, இழப்பீடும், வேலை உத்திரவாதமும் வழங்க வேண்டும்.

சலுகைகள் பெற்று தமிழ கத்தில் தொழில் தொடங்கி யுள்ள பன்னாட்டு மற்றும் பெரும் நிறுவனங்கள் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய் ப்பை வழங்கியிருக்கின்றன. ஜவுளி, ஆயத்தஆடை,விசைத் தறி,தோல்பதனிடுதல்எனஉள் நாட்டு தொழில் உற்பத்திநிறுவ னங்களோ 50லட்சம்பேருக்கு வேலை வாய்ப்பைக் கொடுக் கின்றன.

பஞ்சை ஏற்றுமதி செய்யக் கூடிய மத்திய அரசின் மோச மானகொள்கைகளால்ஜவுளித் தொழில் கடுமையாக பாதித்தி ருக்கிறது. ஏற்கனவே, உள்நா ட்டு உற்பத்தித் துறை தேக்கம டைந்திருக்கும் சூழலில் மத் திய அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.பொதுத்துறை மற்றும் கூட் டுறவு சர்க்கரைஆலைகளில், கரும்பு விவசாயிகளுக்கு உள்ள பாக்கித் தொகைகளை உடனடியாக வழங்க வேண் டும். 

விவசாயிகளுக்கும், நிர் வாகத்துக்கும் இணக்கமான சூழலை ஏற்படுத்தினால்தான் அவற்றின் லாபத்தை அதிகரி க்க முடியும். ‘மொலாசஸ்’ எனப்படும் சர்க்கரை ஆலைக் கழிவு விற்பனை யில் கவனம் செலுத்தினால் தற்போதுள்ள தை விட கூடு தல் வருமானம் ஈட்ட முடியும். எத்தனால் மற்றும் எரிசாராய உற்பத்தியை அரசே தொடங்கு வது வரவேற் புக்கு உரியதா கும். அனைத்து கூட்டுறவு ஆலைகளிலும் இத்திட்டத்தை விரிவாக்க வேண்டும். சர்க்கரைஆலைத் தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வும், பிழிதிறனுக்கு ஏற்பதொழி லாளர்களை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு கே. தங்கவேல் பேசினார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)