Thursday 9 January 2014

சாயக் கழிவு சுத்திகரிப்பில் புதிய அத்தியாயம் : எம்.எல்.ஏ பாராட்டு!

திருப்பூர் சாயக் கழிவுப் பிரச்சனைக்கு தீர்வுகாண பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் பூச்சிய சுத்திகரிப்பை எட்டுவது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகத்தினர் கண்டறிந்துள்ள 'சாஸ்த்ரா பாக்டீரியா', புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது. இதற்கு கே.தங்கவேல் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அலுவலக செய்திக் குறிப்பில் கூறியுள்ளது: தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தினர், திருப்பூர் சாயக் கழிவுப் பிரச்சனை உச்சத்தில் இருந்த காலத்தில், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் ஆகியோரை தொடர்புகொண்டு சாய சுத்திகரிப்பில் உள்ள பிரச்சனைகளை கேட்டதுடன், தங்கள் ஆராய்ச்சி குறித்த தகவலை எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் உதவியுடன்  வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சிவசக்தி டையிங் நிறுவனத்தில் இருந்து சாயக் கழிவு  சேகரித்து சாஸ்த்ரா பல்கலைகழகத்தின் நானோ தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

சோதனை வெற்றி:
    சாயக் கழிவுகளின் மீது சாஸ்த்தா பாக்டீரியாவை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வின்  முடிவுகள் வெற்றியடைந்ததாக சாஸ்தா பல்கலைக் கழக பேராசிரியர் மீரா பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த முறையில் இப்போது 7 நிலைகளில் மேற்கொள்ளும் சுத்திகரிப்பை, இரண்டு நிலைகளிலேயே எட்டலாம் என்றும், சாயத்தின் நிறம், உவர்ப்பு மற்றும் விஷத்தன்மையை இது அகற்றுவதாகவும் கூறினார். ஆய்வக நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றியடைந்தை அடுத்து அதனை காப்புரிமை செய்துள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பம் டர்பான கலந்துரையாடல் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் 7.1.2014 செவ்வாயன்று நடந்தது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பொது மேலாளர் காந்தி ராஜன், நிர்வாக இயக்குனர்கள் கே.கே.பத்மநாபன், சந்திரசேகர், சண்முகம் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர். பல்கலைக் கழக துணை வேந்தர் சேதுராமன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

அடுத்தகட்ட ஆய்வு:
    ஆய்வக நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை, அடுத்தகட்டமாக சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, திருப்பூர் வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையத்தில் தொட்டிகள் ஒதுக்கப்படவுள்ளன. இதில் கிடைக்கும் தரவுகளை வைத்து, சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால், சாயக்கழிவு சுத்திகரிப்பில் இது புதிய அத்தியாயமாக மாறும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புதிய பாக்டீரியாவை சாயக் கழிவு நீரில் பயன்படுத்திய பின், அதில் விடப்பட்ட மீன் ஒரு வாரம் வரை உயிருடன் இருந்துள்ளது. மேலும், இதுவரை பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை விட, இந்த முறையில் உவர்ப்பு நீக்கல் புதிய சாத்தியமாகியுள்ளது.

1 கருத்துகள்:

வவ்வால் said...

இந்த இணைய வலைப்பதிவினை எழுதுவது உண்மையிலேயே எம்.எல்.ஏ தானுங்களா? இல்லை அவர்கள் பெயரில் யாரேனும் ஆள்மாறாட்டம் செய்றாங்களா?

ஏன்னா திரையுலகினரெல்லாம் அவ்வப்பொழுது "என்ப்பெயரில் போலி முகநூல்,துவித்தர் " அக்கவுண்ட் உருவாக்கிட்டாங்கன்னு புகார் வாசிப்பதால் கேட்டேன் :-))

#சாய பட்டறை கழிவுகளை சுத்திகரிக்க உயிரித்தொழில்நுட்பம் பயன்ப்படுத்துவது நல்ல முன்னேற்றம். ஆனால் செயற்கை சாயங்களைப்பயன்ப்படுத்துவதற்கு பதில் இயற்கை சாயங்கள் மற்றும் அதிக கேடு விளைவிக்காத ரசாயனச்சாயங்கள் எனப்பயன்ப்படுத்தினாலே "சுற்றுச்சூழல்" பாதிக்காமல் தடுத்துவிடலாம்,விலை மலிவாக இருக்குனு மட்டமான தடைசெய்யப்பட்ட சாய ரசாயனங்களை திருப்பூரில் பயன்ப்படுத்துவதால் தான் சுத்திகரிப்பு சிக்கலே உருவாகுது எனலாம்.

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)