Monday 8 April 2013

நெடுஞ்சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் விடுவது சரியல்ல: கே.தங்கவேல்


தேதி: மார்ச் 25-

தமிழக சட்டப்பேரவையில் 2வது நாளாக நிதி நிலை அறிக்கை மீது நடை பெற்ற விவாதத்தில் கே.தங்கவேல் MLA பேசியது வருமாறு:

மத்திய அரசின் கொள்கையினால் டீசல் - பெட்ரோல் விலை உயர்வினால் கடுமையான விலை உயர்வு ஒருபக்கம் இருக்கையில், பொருளாதார வளர்ச்சி குறைந்தும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குன்றியும் உள்ள இன்றைய கடுமையான தேசிய பொருளாதாரச் சூழலில் இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என் பதை சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளீர் கள். அதேபோல் பொருளாதார வீழ்ச்சி யின் தாக்கத்தை குறைத்து வரும்வளர்ச்சி யின் மூலமாக மாநில அரசு ஏற்கனவே உணரத் தொடங்கியது என்பதையும் ஏற் றுள்ளீர்கள்.

மாநிலத்தின் மொத்த உற்பத்தி பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.61 சதம் மட்டுமே இருக்கும். மேலும் கடுமையான வறட்சி, காவிரி பாசனப் பகுதியில் பயிர் பாதிப்பு ஆகியவற்றால் முதன்மைத் துறை யின் (வேளாண்)  வளர்ச்சி பாதிக்கப்பட் டுள்ளதுடன் சேவைத் துறையின் வளர்ச்சி யும் பாதித்துள்ளது. தேசிய பொருளா தாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, மின் தட்டுப்பாடு ஆகியவற்றால் உற்பத்தித் துறையின் வளர்ச்சியும் பாதிப்படைந்துள் ளதை சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளீர் கள்.

தமிழகத்தில் விலையில்லா அரிசி திட் டம் தொடர்வதையும், பருப்பு வகைகள் ரேசன் கடைகள் மூலம் தொடர்வதுடன் கூட்டுறவு கடைகளின் மூலம் கிலோ ரூ. 20/-க்கு அரிசி விற்கப்படும் என்ற அறி விப்பும் வரவேற்கத்தக்கது. பருப்பு வகை கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்டு காய்கறி விலையை கட்டுப்படுத்த நகர்ப் புற பகுதிகளில் கூட்டுறவு அமைப்பு களின் மூலமும், தோட்டக் கலைத் துறை யின் மூலமும் விவசாயிகளையும், நுகர் வோரையும் நேரடியாக இணைக்கக் கூடிய பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற் கத்தக்கது.

உணவுப் பாதுகாப்புக்கான மானியம் ரூ. 4,900 கோடி ஒதுக்கியிருப் பதை வரவேற்கிறோம். இதை அதிகரிக்க வேண்டும். அதே சமயத்தில் ரேசன் கார்டு புதுப்பிக்கும் பணியையும், உள்தாள் ஒட் டும் பணியையும் விரைவுபடுத்த வேண் டும். விண்ணப்பம் செய்பவர்களுக்கு புதிய ரேசன் கார்டுகள் வழங்கிட வேண்டும். பகுதி நேரக் கடைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி பகுதி நேரக் கடைகளை அதிகரிக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை திறம் படக் கையாளத் தேவையான வசதிகளை காவல்துறைக்கு இந்த அரசு அளித்துள்ள போதிலும், நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன் முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பத்திரிகைகளில் அன்றாடச் செய்திகளாக மாறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளி களை உடனடியாக கைது செய்வதோடு உரிய தண்டனை வழங்குவதில் கூடுத லான கவனமும், அரசின் தலையீடும் தேவைப்படுகிறது.

அதே நேரத்தில் மாநிலத்தில் கடுமை யான வறட்சி, பயிர் சாகுபடி பொய்த்த நிலைமை நாடு முழுமைக்கும் பொது வான பொருளாதார மந்த நிலை, கடுமை யான மின்வெட்டு ஆகிய சூழலில் இப்பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது வரிவருவாயில் இலக்கை உயர்த்த தவறியதால் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய பங்கு குறைந்திருக் கின்றது என்பதையும் சரியாகவே எடுத் துக் காட்டியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மாநில உரிமைகளில் கை வைக்கின்ற மத்திய அரசின் தொடர் நடவடிக்கை யினை கண்டித்து இன்னமும் அழுத்த மாக சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு பக்கம் வறட்சி நிவாரணம், டெல்டா பகுதியில் அளிக்கப்பட்டு வந்தா லும் அது மாநிலத்தின் பிறப் பகுதியிலும் விஸ்தரிக்க வேண்டும். மேலும் விவசாயத் தொழிலாளர்களுக்கும், குத்தகை விவசாயி களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும். பின்தங்கியுள்ள தென்மாவட்டங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க புதிய சலுகைத் தொகுப்பு அறிவிக்க உள்ளது. மாநிலத்திற்கு மேலும் பல தொழிற்சாலை களைக் கவரும் வகையில் சிப்காட் நிறு வனம் மூலம் 25,000 ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட நில வங்கியை இந்த அரசு ஏற் படுத்தும் என்பதும் தூத்துக்குடியில் கப் பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. விவசாயி களுடைய நிலங்கள் பாதிக்காமல் நிலம் கையகப்படுத்த வேண்டும். உரிய நட்ட ஈடும் வழங்க வேண்டும்.

அதே சமயம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட் டங்களில் சிறு, குறு தொழில்களான என் ஜினியரிங் சம்பந்தப்பட்ட, பனியன், பவர் லூம், கைத்தறி, கார்மெண்ட்ஸ் ஆகிய தொழில்கள் மின்வெட்டாலும், மத்திய அரசின் கொள்கைகளாலும் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சு, நூல் ஏற்றுமதி இறக்குமதி கொள்கையினாலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அதனை ஈடுகட்டும் வகையில் ஜெனரேட்டர் மூலம் மின்சார உற்பத்தியை தொடங்கி ஓர ளவு பாதிப்பைக் குறைக்க டீசலுக்கு மானி யம் வழங்கிட வேண்டும்.

ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன்: சிறு குறு தொழில்கள் பாதிக் கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இந்த நிறு வனங்கள் ஜெனரேட்டர்கள் வாங்க ஏற்க னவே அளிக்கப்பட்டுவந்த உதவித் தொகையை 1.5லட்சம் ரூபாயில் இருந்து 5லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. ஜெனரேட்டர்கள் மீது தற்போது விதிக்கப் பட்டுள்ள மதிப்புகூட்டுவரியை 14.5 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காட்டாக குறைத்துள்ளது. தமிழநாடு தொழில்முத லீட்டு கழகம் மூலம் கடன் பெற்று ஜென ரேட்டர்கள் வாங்க   சிறு குறு தொழில் நிறு வனங்கள் விண்ணப்பித்தால் பங்குத் தொகையாக 20 விழுக்காடு தொகையை செலுத்தவேண்டும் என்பதை 10 விழுக் காடாக அரசு  குறைத்துள்ளது அரசு. மேலும் டீசல் ஜெனரேட்டருக்கு பயன் படுத்தப்படும் பர்னர்ஸ் ஆயில் மீதான  மதிப்புகூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது.

கே.தங்கவேல்: அரசு பள்ளி களில் மாணவர்கள் எண்ணிக்கை கணிச மாக குறைந்துவருவது கவலையளிக்கிறது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்: மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக எந்த கணக்கு அடிப் படையில் தாங்கள் கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. பள்ளிக்கல்வியாக இருந்தாலும் உயர்கல்வியாக இருந்தாலும் ஊக்கத்தொகை கொடுத்து மாணவர்கள் தொடர்ந்த கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரி படிப் பாக இருந்தால் லேப்டாப் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இடை நிற்கா கல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குணசேகரன்(சிபிஐ): தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசு ஆரம்ப பள்ளியில் மாண வர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதற்கு காரணம் ஆண்டுக்காண்டு பல பள்ளிகள் முடப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை  தனியார் பள்ளிகள் மற்றும் ஆங்கில வழி பள்ளிகள் மீது ஏற்பட்டுள்ள மோகம் ஆகிய காரணங்களால்  தனியார் பள்ளி களில் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்து  அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதனை மத்திய மாநில அரசு களின் ஆய்வறிக்கையும் சுட்டிக்காட்டி யுள்ளது. தாய்மொழிக்கல்வியும் இதில் அடங்கியிருப்பதால் தமிழக அரசு தலை யிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன்: அரசு ஆரம்பப்பள்ளி களில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதாக உறுப்பினர் கூறினார்.ஆனால் தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளி களில் மாணவர்கள் அதிகளவில் பயின்று வருகிறார்கள் என்பதை உறுதியாக கூற முடியும். தொடக்கப்பள்ளில் 11லட்சத்து 63ஆயிரத்தி 367மாணவர்களும் நடுநிலைப் பள்ளிகளில் 13 லட்சத்து 53ஆயிரம் மாண வர்களும்  உயர்நிலை பள்ளிகளை பொறுத்த வரை 7லட்சத்து20 ஆயிரத்தி 381 மாண வர்களும் கல்லூரிகளில் சுமார் 24ஆயிரம் மாணவர்களும் ஆக மொத்தம்  அரசு பள்ளி கல்லூரிகளில் 58லட்சத்து 52ஆயிரத்தி  896 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்:  6லட்சத்து 82ஆயிரம் மாணவர்கள் கடந்த நிதியாண்டில் உயர் கல்விக்கு சென்றுள் ளார்கள். கடந்த கல்வியாண்டில் மட்டும் கூடுதலாக சுமார் 6லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் சீரான வளர்ச்சி இருந் தால் தான் உயர்கல்வித்துறையில் வளர்ச்சி இருக்கும்.

கே.தங்கவேல்:  அரசு பள்ளி களில் இலவச மடிக்கணினி, பாட புத்தங் கள் போன்றவை அளிக்கப்பட்டாலும் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது கவலை யளிப்பதாக உள்ளது. எனவே இப்பள்ளி களில் கல்வித் தரத்தை மேம்படுத்த குறிப் பான திட்டம் தேவை. விஜயதரணி(காங்):  கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூர் உள்ளிட்ட பகுதி களில் அரசு பள்ளிகள் முடிக்கிடக்கின் றன. பல ஆண்டுகளுக்கு முன்பே இவை மூடப்பட்டுவிட்டது. தமிழ்வழிக்கல்வி என்பதால் மாணவர்கள் சேரத் தயங்கு கிறார்கள் போலும். அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தை பலஆண்டு களாக அரசு திட்டம் வைத்துள்ளது.

அமைச்சர் வைகைசெல்வன்: அரசு பள்ளிகளில்தான் கூடுதலாக சுமார் 40லட்சம் மாணவர்கள் பயின்றுவருகிறார் கள்.
கே.பாலகிருஷ்ணன்: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர் கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அமைச்சர் கூறினார்.இயங்குகிற தனியார் பள்ளிகள் எவ்வளவு? அரசு பள்ளிகள் எவ் வளவு என்பதை அமைச்சர் கூறவேண் டும். அப்போது தான் மாணவர்கள் எதில் அதிகமாக சேருகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும். அரசுப்பள்ளிகள் மிக அதிகமாக உள்ளன. தனியார் பள்ளி கள் சரிபாதியாகத்தான் உள்ளன. ஆகவே இதை சரிசெய்யவேண்டும்.

கே.தங்கவேல்: மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வரு கிறது. 2012 ஜூன், ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 657 ஆசிரியர் பணியிடங்கள் கிடைக்கப் பெறாமல் உள்ள கணினி அறிவியல் பட்ட தாரி ஆசிரியர்களுக்கு பணி கிடைக்க அரசு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள் கிறேன். மதுரை மாநகராட்சியில் பல பள்ளி களை மூட இருக்கிறார்கள். உடுமலைப் பேட்டை தொகுதியில் கூட அப்படிப்பட்ட நிலை இருக்கிறது.

2012 ஜூன் மாதத்தில் ஆசிரியர் தேர் வில் வெற்றி பெறஅனைவருக்கும் ஆசிரியர் பணியிடம் வழங்கப்படவேண்டும். கணினி, இதர பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களை இந்த கல்லூரிகளில் நியமிக்கவேண்டும்.
தமிழகத்தில் கடந்தாண்டு 1.27 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி யுள்ளீர்கள். இவ்வாண்டில் 2 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளதை வரவேற்கிறோம். அதே சமயத்தில் தமிழகத்தில் சுமார் 35 லட்சம் பேர் வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்திருக்கும் நிலையில் இவ்வறிப்பு என்பது மிகவும் குறைவே. இதில் நிலம் வகை மாற்றம் செய்யாமல் அதிகரிக்க முடியாது. எனவே வகை மாற்றம் செய்து தமிழகத்தில் உள்ள வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி யின் சில பகுதிகளில் பட்டா கொடுக்க மாவட்ட நிர்வாகம் மறுத்து வரும் நிலை உள்ளது. இதிலும் அரசு உத்தரவு இருப்ப தாக சொல்லப்படுகிறது. இதே போன்று கோயில் நிலங்களில் பல தலைமுறை களாக குடியிருப்போர் பிரச்சனைகளில் நிரந்தரமாக தீர்த்திட வழிவகைகள் காண வேண்டும். மேலும் மாநிலங்களில் பல இடங்களில் வீட்டுவசதி மேம்பாட்டிற்காக என அறிவிக்கப்பட்டு எந்த மேல் நடவடிக் கையும் இல்லாமல் அறிவிப்போடு நின் றுள்ளது. இது தெரியாமல் ஆயிரக்கணக் கானவர் மனை வாங்கி வங்கி, எல்.ஐ.சி. கடன் பெற்று வீடுகட்டியுள்ளனர்.

நகர்ப்புற நில உச்சவரம்பு என அறி வித்து அதனை அறியாமல் வீட்டுமனை வாங்கி அவதிப்படுபவர்கள் பல ஆயிரக் கணக்கில் உள்ளனர். இவற்றை கண்ட றிந்து முறைப்படுத்த வேண்டும். உள் ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதிவரு வாயிலிருந்து 10 சதவிகிதமாக அறிவித் துள்ளீர்கள். இதனை 30 சதவிகிதமாக அதிகரித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிட வேண்டும்.

நெஞ்சாலைத்துறையில் அதன் வசம் உள்ள சாலைகளின் ஒரு பகுதியை பராம ரிக்கும் பொறுப்பு தனியாருக்கு ஒப்ப டைத் தும் அதனை விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு சரியல்ல. இது சாதாரண மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.  பொது வாகவே சுகாதாரம், கல்வி, சாலைகள் போன்ற மக்கள் சார்ந்த பணிகளை அரசும், தனியாரும் சேர்ந்து செய்வது என்பது தனியாருக்கே பலனளிக்கின்றது. மாறாக மக்களுக்கு பயன்படவில்லை என்பதால் இதுபோன்ற பணிகளை அரசே செயல் படுத்த வேண்டும்.

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட் டத்தை கைவிட வேண்டியும், போராடிய 7 மாவட்ட விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கி றேன். அதே சமயம் உளுந்தூர்பேட்டை - சேலம் வரையில்  தேசிய நெடுஞ்சாலை எண் 68-ல் நான்கு வழிபாதை அமைக்க ரிலையன்ஸ் கம்பெனிக்காக நிலம் ஆர் ஜிதம் செய்து அடிமாட்டு விலைக்கு இழப் பீட்டை தீர்மானித்து ஏழை விவ சாயிகள் வயிற்றில் அடித்துள்ளனர். இதனால் விவ சாயிகளுடைய வாழ்நிலை பாதிக்கப்பட்டு பல ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டு வாடிக் கொண்டிருக்கின்றனர். இப்பிரச்சனை யில் அரசு அதிகாரிகளும் முறைகேடு களில் ஈடுபடுகின்றனர். எனவே பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு களை விரைந்து வழங்கிட வேண்டும்.

மின் பற்றாக்குறை குறித்து வெள்ளை யறிக்கை வெளியிட வேண்டும். கோடை காலம் என்பதால் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும். தொழில்துறையும், விவசாய மும் பெருமளவு பாதிப்படையும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு உடனடி நடவடிக்கையும், நீண்ட கால திட்டம் தேவைப்படுகிறது.

பருவமழை பொய்த்து போனதால் குடி நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள் ளது. கோடை காலங்களில் இது அதிக ரிக்கவே செய்யும். இதில் தமிழக அரசு பிரத் யேகமான கவனம் செலுத்த வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ருக்கான உட்கூறுத் திட்டத்தில் ஒதுக்கப் படும் நிதி உரிய முறையில் செலவிடப் படவில்லை. இந்நிதி உட்கூறுத் திட்டத் திற்கு மட்டுமே செலவிடப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத் திற்கு வருடந்தோறும் நிதி ஒதுக்கப்படு கிறது. அந்த வாரியம் கூடுவதே இல்லை. நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று தெரியாத நிலை உள்ளது. எனவே இந்த நலவாரியத்தை மாற்றுத் திறனாளிகளின் சங்க நலனில் அக்கறையுள்ள நிர்வாகி களையும், நலவாரியத்தில் நியமித்து செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்குள்ளான கடு மையான விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கே. தங்கவேல் பேசினார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)