Monday 15 April 2013

மின்வெட்டை சமாளிக்க ஜெனரேட்டர் டீசலுக்கு மானியம் வேண்டும் !

2013 - தமிழக அரசின் நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ மின்வெட்டு குறித்து பேசியது ...

கே.தங்கவேல்: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட் டங்களில் சிறு, குறு தொழில்களான என் ஜினியரிங் சம்பந்தப்பட்ட, பனியன், பவர் லூம், கைத்தறி, கார்மெண்ட்ஸ் ஆகிய தொழில்கள் மின்வெட்டாலும், மத்திய அரசின் கொள்கைகளாலும் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சு, நூல் ஏற்றுமதி இறக்குமதி கொள்கையினாலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அதனை ஈடுகட்டும் வகையில் ஜெனரேட்டர் மூலம் மின்சார உற்பத்தியை தொடங்கி ஓர ளவு பாதிப்பைக் குறைக்க டீசலுக்கு மானி யம் வழங்கிட வேண்டும்.

ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன்: சிறு குறு தொழில்கள் பாதிக் கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இந்த நிறு வனங்கள் ஜெனரேட்டர்கள் வாங்க ஏற்க னவே அளிக்கப்பட்டுவந்த உதவித் தொகையை 1.5லட்சம் ரூபாயில் இருந்து 5லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. ஜெனரேட்டர்கள் மீது தற்போது விதிக்கப் பட்டுள்ள மதிப்புகூட்டுவரியை 14.5 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காட்டாக குறைத்துள்ளது. தமிழநாடு தொழில்முத லீட்டு கழகம் மூலம் கடன் பெற்று ஜென ரேட்டர்கள் வாங்க   சிறு குறு தொழில் நிறு வனங்கள் விண்ணப்பித்தால் பங்குத் தொகையாக 20 விழுக்காடு தொகையை செலுத்தவேண்டும் என்பதை 10 விழுக் காடாக அரசு  குறைத்துள்ளது அரசு. மேலும் டீசல் ஜெனரேட்டருக்கு பயன் படுத்தப்படும் பர்னர்ஸ் ஆயில் மீதான  மதிப்புகூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது.


கே.தங்கவேல்: ”மின் பற்றாக்குறை குறித்து வெள்ளை யறிக்கை வெளியிட வேண்டும். கோடை காலம் என்பதால் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும். தொழில்துறையும், விவசாய மும் பெருமளவு பாதிப்படையும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு உடனடி நடவடிக்கையும், நீண்ட கால திட்டம் தேவைப்படுகிறது.”


மின் பற்றாக்குறை குறித்து வெள்ளை யறிக்கை வெளியிட வேண்டும். கோடை காலம் என்பதால் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும். தொழில்துறையும், விவசாய மும் பெருமளவு பாதிப்படையும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு உடனடி நடவடிக்கையும், நீண்ட கால திட்டம் தேவைப்படுகிறது.”


(முழுமையான விவாதம்)

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)