சென்னை ஏப். 13-
திருப்பூர் பகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்தும், பவானியில் இருந்தும் கடந்த காலம் போல் ஒரு முறை மாற்றி ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் கே.தங்கவேல் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக அவர் 8ஆம் தேதி சட்டப் பேரவையில் பேசும்போது, இப்போது திருப்பூரில் இரண்டு திட்ட குடிநீரையும் கலக்கி விடுகின்ற காரணத்தால் அங்கு பாதிப்பு ஏற்படுகின்றது. கடந்த காலங்களைப் போல ஒரு முறை மேட்டுப்பாளையம் குடிநீரும், மறுமுறை பவானி தண்ணீரும் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இதற்கு பதில் கூறிய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, ஏற்கனவே உள்ளபடி அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது போன்ற சில சூழ்நிலைகளில் தவறுகள் ஏற்படுகின்றபட்சத்தில் அதை மாற்றியமைத்து முறையாக மக்களுக்குத் தேவைப்படுகின்ற அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.



04:55
Posted in:
0 கருத்துகள்:
Post a Comment