சென்னை, ஏப். 25 -
திருப்பூரில் புதிதாக பயணிகள் விடுதி கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
சட்டப்பேரவையில் வியாழனன்று (ஏப்.25) துணைக்கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி உறுப்பினர் கே.தங்கவேல், திருப்பூர் நகராட்சியாக இருந்தபோது 2 பயணிகள் விடுதிகள் இருந்தன. அது வணிக வளாகமாக மாற்றப்பட்டுவிட்டது.
திருப்பூர் சிறிய ஊராக இருந்த போது 2 பயணிகள் விடுதிகள் இருந்தன. தற்போது, திருப்பூர் நகரம் தொழில் வளர்ச்சி பெற்று வர்த்தக ரீதியாக வெளிநாட்டு தொடர்புகளை கொண்டுள்ள திருப்பூர் நகரத்தில் பயணிகள் தங்கும் வகையில் புதிய விடுதி அமைத்துக் கொடுக்கப்படுமா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.பி.முனுசாமி, திருப்பூர் நகரம் வளர்ந்த நகரமாக இருந்து மாநகராட்சியாக மாறியுள்ளது. உறுப்பினர் கேட்டுக் கொண்டதுபோல், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பயணிகள் நன்கு பயன்படுத்தும் வகையில் நல்ல விடுதி ஒன்று கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



22:12
Posted in:
0 கருத்துகள்:
Post a Comment