Tuesday 30 April 2013

மாற்று மருத்துவ நூல்கள் தமிழில் அதிகம் வர வேண்டும் : கே.தங்கவேல் எம்எல்ஏ


திருப்பூர், ஏப்.30-
மாற்று மருத்துவ நூல்கள் தமிழில் அதிக அளவில் வர வேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற விழாவில் கே.தங்கவேல் எம்எல்ஏ கூறினார்.திருப்பூர் காந்திநகர் மத்திய அரிமா சங்கமும், கனவு அமைப்பும் இணைந்து, “காது கேளாமை, வாய் பேச முடியாமையைக் குணப்படுத்தும் அக்குபஞ்சர் இரகசியங்கள்” என்ற செ.நடேசனின் தமிழாக்க நூலையும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் முத்துக்கள் பத்து என்ற சிறுகதை தொகுப்பு நூலையும் வெளியிட்டன.

ஞாயிறன்று நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். திருப்பூர் மத்திய அரிமா சங்கச் செயலாளர் டி.ஆர்.ஸ்ரீகாந்த் வரவேற்றார்.

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் இந்த நூல்களை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 1949ம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு அமைந்த பிறகு, அந்நாட்டு மருத்துவர்களை அழைத்து மாசேதுங், கிராமப்புற விவசாயிகள், தொழிலாளர்களிடம் மருத்துவ சேவையைக் கொண்டு செல்லும்படி கேட்டுக் கொண்டார். மக்கள் விடுதலைப் படையின் மருத்துவக் குழுவில் பணியாற்றிய சாவோ புயுவும் அவரது தோழர்களும் அந்த வேண்டுகோளை ஏற்று அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் காது கேளாமை, வாய் பேச முடியாமையைக் குணப்படுத்த பல்வேறு கள ஆய்வுகளைச் செய்து அற்புதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். அந்த அனுபவங்களை பதிவு செய்த சீன நூலினை செ.நடேசன் தமிழ் மொழியில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளார். இது தமிழ்நாட்டில் காது கேளாமை, வாய் பேசாமையை குணப்படுத்தப் பேருதவியாக அமையும். இது போன்ற மேலும் பல நூல்களை தமிழுக்குக் கொண்டு வர வேண்டும். மிகப்பெரிய மருத்துவ உண்மைகளைக் கொண்டுள்ள இந்நூலை தமிழ் நல்லுலகம் வரவேற்க வேண்டும் என்று கூறினார்.

இந்த விழாவில் பங்கேற்ற டாக்டர் க.முத்துசாமி, ஆர்.ஈஸ்வரன், ஆசிரியர் கூட்டணிப் பொதுச் செயலாளர் முருக செல்வராசன், ஊத்துக்குளி மக்கள் மருத்துவமனை அறக்கட்டளைத் தலைவர் மு.மகாலட்சுமி, சோலார் எனர்ஜி அசேசியேசன் தலைவர் ராஜூ வி.ஆர்.பழனிசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சிஐடியு பனியன் சங்கத் தலைவர் கே.காமராஜ், டாக்டர் என்.சண்முகநாதன், அரிமா கே.பி.கே. செல்வராஜ், கல்வி மேம்பாட்டுக்குழு மாவட்டச் செயலாளர் சு.மூர்த்தி, நுகர்வோர் எக்ஸ்பிரஸ் முத்துக்குமார், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், செ.நடேசன் ஆகியோர் உரையாற்றினர். வழக்கறிஞர் சி.ரவி நன்றி கூறினார்.

(நன்றி: தீக்கதிர்)

1 கருத்துகள்:

thanthugi said...

//மாற்று மருத்துவ நூல்கள் தமிழில் அதிக அளவில் வர வேண்டும் // எதற்கு எது மாற்று என்கிற விவாதம் தேவை. ஏற்கனவே நடப்பிலிருந்த பாட்டி வைத்தியம் தொடங்கி சித்தமருத்துவம், யுனானி, அக்குபங்சர் வரையானவை பாரம்பரிய / மரபுசார் மருத்துவம். அவற்றுக்கு மாற்றாக காலனிய ஆட்சிக்காலத்தில் திணிக்கப்பட்டதுதான் அல்லோபதி.
- ஆதவன் தீட்சண்யா

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)