நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீது திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ பேசியது வருமாறு:
கே.தங்கவேல் : திருப்பூரில் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக நிர்வாகச் சிக்கல்களால் கிடப்பி லுள்ள திட்டங்களை விரைவாக நிறை வேற்ற அரசு நிர்வாகங்கள் ஒருங்கி ணைந்த முயற்சி எடுக்க வேண்டும்.
திருப்பூர் கோட்டம், மணியக்காரம் பாளையத்தில் ரயில்வே பாதையை கடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் திருப்பூர் கோட்டம், அணைப்பாளையத்திலிருந்து ரயில்வே பாதையையும், நொய்யலாற்றையும் கடந்து மங்கலம்பாதையைச் சென்றடையும் வகையில் அமைக்கப்படவுள்ள மேம்பாலம், திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் எஸ்.ஆர்.சி மில் அருகே அமைந்துள்ள ரயில்வே கேட்டுக்கு பதிலாக, ரயில் பாதையைக் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள மேம்பாலம், திருப்பூர் ஊத்துக்குளி சாலை, டி.எம்.எஃப் மருத்துவமனைக்கு அருகில் அமையவுள்ள ரயில்வே கீழ்ப்பாலம், திருப்பூர் ஊத்துக்குளி சாலையுடன் ஹார்வி சாலையை இணைக்கும் வகையில் அமையவுள்ள ரயில்வே சேவைப்பாலம், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து எளிதாக வெளியேரும் வகையில் அமைக்கப்படவுள்ள சுரங்கப்பாலம்.
திருப்பூரில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் சிலைக்கு அருகிலிருந்துவளர்மதி பாலத்தைக் கடந்து சக்தி திரையரங்கச் சாலையை அடையும் வகையில் அமைக்கப்படவுள்ள அடிப்பாலம் திருப்பூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்திருந்த முதலமைச்சர் உறுதியளித்துச் சென்ற படி திருப்பூர் காமராஜர் சாலையிலிருந்து திருப்பூரின் மையப் பகுதி வரை அமைந்திடும் பறக்கும் மேம்பாலத் திட்டம் போன்றவைகளை நிறைவேற்றுவதன் மூலமே திருப்பூரின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
மேலும் புதிதாக, திருப்பூர் சந்தைப் பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டையார் நகர், வெள்ளியங்காடு பகுதிகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். திருப்பூரிலிருந்து வஞ்சிபாளையம் வரை ரயில் பாதையை ஒட்டிச் செல்லும் சாலையை சோமனூர் வரை நீட்டிக்க வேண்டும். நெடுஞ்சாலைகளின் ஓரமாக இருந்த மரங்களையும், நிழற்குடைகளையும் அகற்றியதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். கடும் வெயிலைக் கணக்கில் கொண்டு உடனடியாகக் கட்டிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கே.தங்கவேல் பேசினார்.
(முழு உரையும் படிக்க இங்கே சொடுக்கவும்)
(முழு உரையும் படிக்க இங்கே சொடுக்கவும்)
0 கருத்துகள்:
Post a Comment