காசுள்ளவர்களுக்கு மட்டுமே தரமான வாழ்க்கை கிடைக்குமென்ற சூழல் இந்தியாவில் உருவாகியுள்ளது. உலகமய பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, தனியார் மயம், தாராளமயத்தை ஊக்குவித்ததன் விளைவாக அரசின் கடமைகளாகப் பார்க்கப்பட்ட கல்வி, சுகாதாரம், குடி நீர், உணவுப் பாதுகாப்பு என அனைத் தும் தனியாரைச் சார்ந்ததாக மாற்றப் பட்டு அன்னிய நிறுவனங்களுக்கு கதவு திறக்கப்பட்டு வருகிறது. நவீன யுகத் தின் அடிப்படைத் தேவைகளாக உரு வாகியுள்ள சாலைகள், மின்சாரம், சுகாதாரமான சுற்றுச் சூழல் ஆகிய வையும் பணம்படைத்தவர்களுக்கே என்ற நிலை வந்திருக்கிறது.
உதாரணமாக, மத்திய அரசு அமைத் துள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை எடுத்துக்கொண்டால். அந்த ஆணையம் சாலைகளை கவ னிப்பதை விட, மக்களின் பொருளா தாரத்தை கவனிப்பதில்தான் அக்கறை காட்டுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் போலவே, தேசிய நெடுஞ் சாலைகளில் அமைந்துள்ள சுங்க நிலையங்கள் விலைவாசி உயர்வுக்கு மறைமுகக் காரணியாக அமைந்திருக் கின்றன.
மாநில அரசின் பேருந்துக் கழகங் களையும் மத்திய அரசின் கொள்கை பாதிக்கிறது. உறுப்பினர் கே.பால கிருஷ்ணன், சென்ற முறை சுங்கச் சாவடி கள் பற்றி பேசும்போது, ஒரு பேருந் துக்கு 30 ஆயிரம் ரூபாய், 40 ஆயிரம் ரூபாய் என்று கொள்ளையடிக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது எனக் குறிப் பிட்டார். அப்போது பதிலளித்து அமைச்சர், கடந்த திமுக ஆட்சியில் 4500 கிலோமீட்டர் சாலைகள் தனி யாருக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றி யும், பேருந்து உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் வைத்துள்ள கோரிக் கைக்கு முதலமைச்சர் உரிய நடவ டிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
இந்த சுங்க வசூல் ஏற்படுத்தும் சுமையி லிருந்து மக்களை பாதுகாக்கும் விதத் தில், வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்து மாற்றுச்சாலைகள் அமைக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
(முழு உரையும் படிக்க இங்கே சொடுக்கவும்)
(முழு உரையும் படிக்க இங்கே சொடுக்கவும்)
0 கருத்துகள்:
Post a Comment