தமிழகத்தில் அரசிடம் 7 துறை முகங் கள் உள்ளன. இதில் 3 துறைமுகங் களில் மட்டுமே சரக்கு போக்குவரத் தும், இரண்டில் பயணிகள் போக்கு வரத்தும் நடைபெறுகிறது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங் களை மேம்படுத்துவதற்கு, அரசு கூடு தல் கவனமெடுக்க வேண்டும். தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டு வரும் துறைமுகங்களைப் பொருத்த மட்டில் அவை பாரம்பரிய மீன்பிடித் தளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், கடல் மாசை அதிகரிப்பதுமான அனு பவத்தைக் கணக்கிலெடுக்க வேண் டும். மேலும், தனியார் நிறுவனங் களின் ஏகபோகத்திற்கு கடல் வளம் காவுபோகாத வகையில் அவற்றின் மீதான அரசுக் கட்டுப்பாட்டை அதி கரிக்க வேண்டும்.
தமிழகத்தின், கிழக்கு கடற்கரை யோர மாவட்டங்களின் வளர்ச்சிக் கும், தமிழக ஏற்றுமதி தொழிலகங் களின் நலனுக்கும் கடல்சார் வாணிக வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டு மென்பதில் இருவேறு கருத்துக் களுக்கு இடமிருக்காது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக் குக் கூட்டணியும், அதில் அங்கமாக இருந்த திமுகவும் உறுதியுடன் செயல் பட்டிருந்தால் தமிழகத்தின் கடல்சார் வணிகத்தை பெருக்கிட ஆக்கப்பூர்வ மான காரியங்களை செய்திருக்க முடியும். இவ்விசயத்தில் பிற்போக்கு, மதவாத சக்திகளும் கைகோர்த்துக் கொண்டு தமிழகத்தை வஞ்சித்து விட்டார்கள்.
(சேதுக் கால்வாய் திட்டம் குறித்து கே. தங்கவேல் சில கருத்துக்களை கூறியபோது அது உச்சநீதிமன்றத் தில் உள்ளது.
எனவே உறுப்பினர் தெரி வித்த கருத்துக்களை அவை குறிப் பில் இருந்து நீக்கவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று தங்கவேல் தெரிவித்த கருத்துக் களை அப்போது பேரவைத் தலை வர் இருக்கையில் இருந்த மாற்றுத் தலைவர் பாப்பா சுந்தரம் நீக்கினார்.)
(முழு உரையும் படிக்க இங்கே சொடுக்கவும்)
(முழு உரையும் படிக்க இங்கே சொடுக்கவும்)
0 கருத்துகள்:
Post a Comment