வணிகவரித்துறை சிறப்பாக செயல் படுகிற போதிலும், தனது இலக்கை எட்ட முடியாதது ஏன்?
வணிகவரித்துறை அமைச்சர் ரமணா: வணிகவரித்துறை 47885 ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளது. இலக்கு 47 ஆயிரத்தி 825கோடி ரூபாய். ஆனால் ரூ.60 கோடி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கே.தங்கவேல்: வணிகவரித் துறை யில் மொத்தமுள்ள 10 ஆயிரத்து 500 பணி யிடங்களில் 40 சதவீதம் அதாவது 4 ஆயி ரத்து 500 பணியிடங்கள் காலியாக உள் ளன. இந்த நிலை அதிர்ச்சியளிக்கிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகார்களை விசா ரிக்கும் மேல்முறையீட்டு துணை ஆணை யர்கள் பணியிடங்களில் 20இல் 17 காலி யாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
போலி பில்கள், வரி ஏய்ப்பு புகார்கள் மீது முறையான விசாரணை, இறக்குமதி பொருட்களின் மீது விற்பனை வரி வசூல் ஆகியவற்றை முறையாகச் செய்தால் சுமார் 8 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கூடுத லாக கிடைக்குமென்று துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பதவி உயர்வு வழங்கினாலே 2 ஆயிரம் காலியிடங் களை நிரப்ப முடியும். பதவி உயர்வில், மற்ற துறைகளைப் போல, வணிகவரித் துறையிலும் சீனியாரிட்டி நடைமுறை களை கடைப்பிடிக்க வேண்டும்.
அமைச்சர் ரமணா: வணிகவரித் துறையில் மொத்தம் 10 ஆயிரத்தி 647 பணி யிடங்களில் 750 பணியிடங்கள் நிரப்பப் பட்டு பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகிறார்கள். 3538 பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. அதில் 1339 காலிப் பணியிடங்கள் அலுவலக உதவியாளர்கள். மற்றும் பதிவுறு எழுத்தர் 219 காலிப்பணி யிடங்கள். 1558 காலிப்பணியிடங்களை மொத்த காலிப்பணியிடங்களோடு ஒப் பிடும் போது 44 விழுக்காடு ஆகும். அலு வலக உதவியாளர் காலிப்பணியிடங் களில் 932 பணியிடங்கள் அரசு விதி களின் படி அதிகப்படியாக உள்ள பணியிடங்கள் ஆகும்.
இந்த பணியிடங்களை சரண் செய்வதற்காக துறை சார்பாக உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பதிவுறு எழுத்தர்களை பொறுத்தவரை அவர்கள் பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். அலுவலக உதவி யாளர்கள் தான் அந்த பதவிக்கு செல்ல வேண்டும். ஆனால் யாரும் விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் அந்த பணியிடங்கள் காலியாக உள்ளன.அதிமுக அரசு பதவி ஏற்றபின்னர் தேர் வாணையத்தின் மூலமாக கோரப்பட்ட பணியிடங்கள் 1822. அதில் 878 பணி யிடங்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. 634 பணியாளர்கள் பணியில் சேர்ந்துள்ளளனர்.
வணிகவரித்துறையில் வணிகவரி அலுவலர் என்ற அடிப்படை யில் 417 பணியிடங்கள் துணை வணி வரி அலுவலர் 505 பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டுள்ளது. கூடு தல் ஆணையர் என்ற நிலையில் ஒரு பணியிடம், இணை ஆணையர் என்ற நிலையில் 8 பணியிடங்கள், துணை ஆணையர் 203 பணியிடங்கள் உதவி ஆணையர் 182 பணியிடங்கள், வணிகவரி அலுவலர் நிலையில் 16 பணியிடங்கள் துணை வணிக வரி அலுவலகர் 96 பணி யிடங்கள் உதவியாளர் பணியிடங்கள் 606 ஆக மொத்த 940 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை இந்த ஆண்டு பதவி உயர்வு மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்ட பணியிடங்களை தவிர 912 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் விரைவில் நிரப்பப்படவுள்ளன.
கே.தங்கவேல்: காலிப்பணியிடங் களை நிரப்புவதன் மூலம் வரி வசூலை கூடுதலாக்க முடியும். இவ்விசயத்தில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண் டும். மாநிலங்களின் உரிமையை பாதிப்ப தும், மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற் படுத்துவதுமான மத்திய அரசின் வரிச் சீர் திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்க்க வேண்டும்.
முழு உரை: பதிவுத்துறையில் தனியார்மயம் ஆபத்து!
0 கருத்துகள்:
Post a Comment