Monday, 6 May 2013

பதிவுத்துறையில் தனியார்மயம் ஆபத்து! :கே.தங்கவேல் எம்.எல்.ஏ எச்சரிக்கை (முழு உரை)



சென்னை, மே 6-பத்திரப்பதிவுத்துறையில் தனியார் மயத்தை புகுத்தினால் ஆபத்தான விளைவு கள் ஏற்படும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர் கே.தங்கவேல் எச்சரித்தார்.

திங்களன்று (மே 6) வணிகவரி, பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது வருமாறு:

கே.தங்கவேல்: நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் தொழில்கள் சந்தித்துவரும் மந்த நிலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது வரி வருவாய் இலக்கினை எட்ட தவறியுள்ளதால் மாநிலத்திற்கு ஏற் பட்டுள்ள இழப்பையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த சூழலில், புதிய வரி களின் பெயரால் மக்கள் மீது நிதிச் சுமையை ஏற்றாமலிருக்க முடிவு செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கி றோம்.மாநிலத்தில் அதிகரித்துவரும் பண வீக்கத்தையும், குறைந்துள்ள பொருளா தார வளர்ச்சியையும் எதிர்கொள்ள மேம் போக்கான நடவடிக்கைகள் போதாதென நிதி நிலை அறிக்கையில் சரியாகவே குறிப் பிடப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலை தமிழகத்தில் மட்டும் ஏற்பட்டிருப்பதல்ல.
உலகப் பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக - இந்தியாவும் பாதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தாக்கம் தமிழகம் வரை நீண்டிருக்கிறது.உலகமயத்தை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு, பொருளாதார சீர்திருத்தங் களின் பெயரால் மேற்கொண்ட சீரழிவு நடவடிக்கைகள் இந்த மந்த நிலைக்கு துணைபோயுள்ளன.

வங்கித்துறை, இன் சூரன்ஸ் துறைகள் அந்நிய மூலதனத்தின் கைகளில் ஒப்படைக்கும் முயற்சியை இடதுசாரிகள் போராடித் தடுத்தார்கள்.
அதனால்தான், உலக நெருக்கடியி லிருந்து இந்தியா ஓரளவு தப்பிட்தது என்பதை பொருளாதார வல்லுனர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றும் தனது சீரழிவு சீர்திருத்தங்களை மத்திய அரசு தொடர்ந்து வருகிறது. இந்த நிலை யில் சில்லரை வர்த்தகத்தில் வால்மார்ட் போன்ற அன்னிய பெரு நிறுவனங்களுக்கு எதிரான நிலையெடுத்துள்ள தமிழக அர சின் நடவடிக்கையை வரவேற்கிறோம்.

மத்திய அரசிலிருந்து மாறுபட்ட கண் ணோட்டத்தோடு மாநில அரசு செயல் பட்டு, மக்கள் மீதான சுமைகளைக் குறைத் திட முயல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

நிதிச் சிக்கனம் என்ற பெயரில் செலவு களை குறைத்துக் கொள்வதும், தனியார் முதலீடுகளுக்கு சலுகைகள் கொடுப்ப தும், நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள் வதும் மட்டும் இப்போதுள்ள சூழலில் போதுமானதல்ல. கேந்திரமான துறை களில் பொது முதலீட்டை உயர்த்துவதும், சிறு தொழில்களை ஊக்கப்படுத்துவதும், ஒவ்வொரு குடும்பங்களின் வருவாயை யும் பெருக்கும் விதத்தில் திட்டங்கள் தீட்டுவதும் அவசியம்.
தனியார் முறை கேடாக கொள்ளை லாபமடிக்கும் கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்கள், ஆற்று மணல் சில்லரை விற்பனைகளில் அரசே இறங்குவதன் மூலம் வரியல்லாத வரு வாயை உயர்த்தி, அதனை பொது முதலீடு களுக்கு பயன்படுத்த வேண்டும்.
வணிகவரித்துறை:
வணிகவரித்துறை சிறப்பாக செயல் படுகிற போதிலும், தனது இலக்கை எட்ட முடியாதது ஏன்?

வணிகவரித்துறை அமைச்சர் ரமணா: வணிகவரித்துறை 47885 ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளது. இலக்கு 47 ஆயிரத்தி 825கோடி ரூபாய். ஆனால் ரூ.60 கோடி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கே.தங்கவேல்: வணிகவரித் துறை யில் மொத்தமுள்ள 10 ஆயிரத்து 500 பணி யிடங்களில் 40 சதவீதம் அதாவது 4 ஆயி ரத்து 500 பணியிடங்கள் காலியாக உள் ளன. இந்த நிலை அதிர்ச்சியளிக்கிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகார்களை விசா ரிக்கும் மேல்முறையீட்டு துணை ஆணை யர்கள் பணியிடங்களில் 20இல் 17 காலி யாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

போலி பில்கள், வரி ஏய்ப்பு புகார்கள் மீது முறையான விசாரணை, இறக்குமதி பொருட்களின் மீது விற்பனை வரி வசூல் ஆகியவற்றை முறையாகச் செய்தால் சுமார் 8 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கூடுத லாக கிடைக்குமென்று துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பதவி உயர்வு வழங்கினாலே 2 ஆயிரம் காலியிடங் களை நிரப்ப முடியும். பதவி உயர்வில், மற்ற துறைகளைப் போல, வணிகவரித் துறையிலும் சீனியாரிட்டி நடைமுறை களை கடைப்பிடிக்க வேண்டும்.

அமைச்சர் ரமணா: வணிகவரித் துறையில் மொத்தம் 10 ஆயிரத்தி 647 பணி யிடங்களில் 750 பணியிடங்கள் நிரப்பப் பட்டு பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகிறார்கள். 3538 பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. அதில் 1339 காலிப் பணியிடங்கள் அலுவலக உதவியாளர்கள். மற்றும் பதிவுறு எழுத்தர் 219 காலிப்பணி யிடங்கள். 1558 காலிப்பணியிடங்களை மொத்த காலிப்பணியிடங்களோடு ஒப் பிடும் போது 44 விழுக்காடு ஆகும். அலு வலக உதவியாளர் காலிப்பணியிடங் களில் 932 பணியிடங்கள் அரசு விதி களின் படி அதிகப்படியாக உள்ள பணியிடங்கள் ஆகும்.


இந்த பணியிடங்களை சரண் செய்வதற்காக துறை சார்பாக உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பதிவுறு எழுத்தர்களை பொறுத்தவரை அவர்கள் பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். அலுவலக உதவி யாளர்கள் தான் அந்த பதவிக்கு செல்ல வேண்டும். ஆனால் யாரும் விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் அந்த பணியிடங்கள் காலியாக உள்ளன.அதிமுக அரசு பதவி ஏற்றபின்னர் தேர் வாணையத்தின் மூலமாக கோரப்பட்ட பணியிடங்கள் 1822. அதில் 878 பணி யிடங்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. 634 பணியாளர்கள் பணியில் சேர்ந்துள்ளளனர். 

வணிகவரித்துறையில் வணிகவரி அலுவலர் என்ற அடிப்படை யில் 417 பணியிடங்கள் துணை வணி வரி அலுவலர் 505 பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டுள்ளது. கூடு தல் ஆணையர் என்ற நிலையில் ஒரு பணியிடம், இணை ஆணையர் என்ற நிலையில் 8 பணியிடங்கள், துணை ஆணையர் 203 பணியிடங்கள் உதவி ஆணையர் 182 பணியிடங்கள், வணிகவரி அலுவலர் நிலையில் 16 பணியிடங்கள் துணை வணிக வரி அலுவலகர் 96 பணி யிடங்கள் உதவியாளர் பணியிடங்கள் 606 ஆக மொத்த 940 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை இந்த ஆண்டு பதவி உயர்வு மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்ட பணியிடங்களை தவிர 912 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் விரைவில் நிரப்பப்படவுள்ளன.

கே.தங்கவேல்: காலிப்பணியிடங் களை நிரப்புவதன் மூலம் வரி வசூலை கூடுதலாக்க முடியும். இவ்விசயத்தில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண் டும். மாநிலங்களின் உரிமையை பாதிப்ப தும், மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற் படுத்துவதுமான மத்திய அரசின் வரிச் சீர் திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்க்க வேண்டும்.

கேரள ஏல மையங்களில் 2 சதவீத வரி செலுத்தி எடுத்துவரப்படும் ஏலக்காய்கள் தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த நடவடிக் கையில் தமிழகத்திற்கு எந்த லாபமும் இல்லை. அதே சமயம், தமிழகத்தி லிருந்து வட மாநிலங்களுக்கு அனுப்பப் படும் ஏலக்காய்களுக்கு சி.பார்ம் எப்.பார்ம் கிடைக்காததால் வரி நிலுவைகள் அதி கம் இருக்கின்றன. ஆயத்த ஆடை, கோதுமை, வெல்லம் போன்ற பொருட் களுக்கு உள்ளதைப் போல வாட் வரியை 2 சதவீதமாக குறைத்து, படிவம் சமர்ப் பிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டு மென ஏலக்காய் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் ரமணா: சி பார்ம் மற்றும் எஃப் படிவங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியை அரசு செய்து கொடுத்துள்ளது.வணிகர்கள் அந்த வச தியை பயன்படுத்திகொண்டு சி மற்றும் எஃப் படிவங்களை நிரப்பி அனுப்பலாம்.

ஏ.லாசர்: ஏலக்காய் ஸ்டாக் இருக் கும் போது இந்த பார்ம் கிடைக்காத கார ணத்தால் நமது மாநில அரசுக்கு வர வேண்டிய ரூ.15முதல் ரூ.20 கோடி ரூபாய் வரிவருவாய் நிலுவையில் உள்ளது. 2 விழுக் காடு வாட் வரி போட்டால் தமிழகத்திற்கு நேரடியாக வரி கிடைக்கும். மேலும் திருட்டுத்தன மாக தொழில்நடத்துகிறோம் என்ற கெட்டப் பெயரும்போகும் என்று அந்த வியாபாரிகள் கூறுகிறார்கள். அதை அரசு பரிசீலிக்க வேண்டும். 

அமைச்சர் ரமணா: பிறமாநிலங் களுக்கு சி பார்ம் பெற்றுத்தான் விற்பனை செய்யவேண்டும். அதில் கூடுதல் விற் பனை வரி போட மாநில அரசுக்கு வழி யில்லை. கேரளாவின் போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏலக்காய் வாங்கி பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் நீண்டகாலமாக அந்த கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளனர். அது அரசின் பரிசீலனையில் உள்ளது. முத லமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்ச னையை கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கே.தங்கவேல்: மத்திய விற்பனை வரி சட்டப்படி திருப்பூரிலிருந்து வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்யப்படும் பின்னலாடைகளுக்கு சி படிவம் சமர்ப் பிக்க இயலாதவர்கள் 10 சதவீத வரியை செலுத்திவிட்டு, 9 சதவீதத்தை மானிய மாக பெறுகின்றனர். இதை பெறுவதில் உள்ள இடர்பாடுகளை போக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும். இதனை அதற்கு முன் விடுபட்ட காலத்திற்கு முன் தேதியிட்டு அமலாக்க வேண்டுமென உள் நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் கோரியுள் ளனர். இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.

அமைச்சர் ரமணா: 2005முதல் பின்னலடை உற்பத்தியாளர்கள் செலுத்த வேண்டிய 10 சதவீத வரியை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது.

கே.தங்கவேல்: தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டப்படி ஏற்றுமதி செய்யப் படும் பின்னலாடைகளுக்கு பூரண வரி விலக்கு வழங்கப்படுகிறது. 100 கிலோ நூலை துணியாக மாற்றும்போது 100 கிலோ துணி கிடைக்கும். ஆனால் 95 கிலோ தான் துணி உற்பத்தியாகுமென கணக் கிட்டு 95 சதவீத வரி திருப்புத்தொகை யாக தரப்படுகிறது. இதுபற்றி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒருபகுதி உற்பத்தியாளர்கள், தீர்ப்பின் அடிப்படை யில் 100 சதவீதம் திருப்புத் தொகையாக பெற்று வருகின்றனர். இதனைப் பின்பற்றி அனைவருக்கும் முழு தொகை திரும்ப வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.


பத்திரப் பதிவு, முத்திரைத்தாள் :
கடந்த பத்தாண்டுகளில் ஆவணங் கள் பதிவு இரண்டரை மடங்கு அதிகரித் துள்ளது, கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை 3 மடங்கு கூடியுள்ளது. இதுவே, இத்துறையின் வளர்ச்சியைக் காட்டு கிறது. பத்திரப்பதிவு நடைமுறையில் தவறு கள் நடக்க வாய்ப்பிருப்பதை உணர்ந்து அரசு பல நடவடிக்கைகளை மேற் கொள்ள முடிவு செய்துள்ளது. கண் காணிப்பு காமிராக்கள் பொருத்துவது அலு வலகங்களை கணினிமயப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வரவேற்கத் தகுந்ததாகும். மின் வெட்டை சமாளிக்க ஜெனரேட்டர்கள் வழங்குவதும் சூரிய மின் சத்தியை ஏற்படுத்துவதும் வரவேற்கத் தக்க நடவடிக்கையாகும்.

அதே சமயம், ஆன் லைன் முறையில் கணினிகளை இணைக்கும் பணியில் ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட் டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. ரகசிய ஆவணங்களை நிர்வகிக்கும் பணியில் தனியாரை ஈடுபடுத்துவது நல்ல விளைவு களை ஏற்படுத்தாது. கேரளாவில் பதிவுத் துறையின் தனியார்மயம் புகுத்தப்பட்டு எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ள அனு பவத்தைக் கணக்கிலெடுக்க வேண்டும்.
அமைச்சர் ரமணா: பதிவுத்துறை யில் கணினிமயமாக்கும் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ள கோரப்பட்டுள்ளன. மென் பொருள், வன்பொருள் போன்ற பணிகள் ஒப்பந்தப்புள்ளியில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ஆனால் ரகசியம் காக்கப்படும் பணிகள் மட்டும் பதிவுத்துறை மூலமாகத்தான் செய்யப்படும்.

கே.தங்கவேல்: தகவல் தொழில் நுட்ப பணிகளை தனியாரைக் கொண்டு செய்வதால் பண விரயமும், பிழைகளும் அதிகமாக வாய்ப்புள்ளது. திறமையான கணினி பொறியாளர்களைக் கொண்டு தமிழக அரசே தகவல் தொழில்நுட்ப மேம் பாடுகளைச் செயல்படுத்த வேண்டும். 150 ஆண்டுகள் வரை பழமையான ஆவணங்கள் இத்துறையில் பராமரிக்கப் படுகின்றன. இவற்றை ஆவணப் பாது காப்பகங்கள் ஏற்படுத்தி பராமரிக்க வேண் டும். இதில் டிஜிட்டல் முறையை புகுத்து வது பணிகளை எளிதாக்கும் என்ற போதி லும், தகவல் திருட்டு, வைரஸ் பாதிப்பு உள் ளிட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கும் வாய்ப்பிருப்பதால் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளும், ஆவணங்களின் அச்சுப் பிரதிகளை பாதுகாக்கும் முறை தொடர வேண்டும்.

சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலம் - பட்டா மாறுதல் உள்ளிட்ட வரு வாய்த்துறை பணிகளையும் மேற்கொள் ளும் வகையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங் களை முறையாக அமலாக்க வேண்டும். தற்போது பொதுமக்கள் இரண்டு பக்கமும் கட்டணம் செலுத்துவதுடன், அலைக் கழிப்புக்கும் ஆளாகின்றனர்.

புதிதாக உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் குறித்து மாற்றுக் கருத்திருப் பின் மேல்முறையீட்டுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
மேல்முறையீடுகளை விசா ரிக்க வெளிப்படையான நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறைந்த அளவில் நிலம் வாங்கும், ஏழை எளியமக்கள் பாதிக் காத வகையில் பதிவுத்துறை சீர்திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சர் ரமணா: பதிவுத்துறை யில் மேல்முறையிட்டிற்கு முத்திரைத் தாள் சட்டம் 47 படி வாய்ப்பளிக்கப்படு கிறது. பதிவு செய்யும் நபர்கள் வழிக்காடு மதிப்பீடு அதிமாக இருப்பதாக கருதி னால் சார்பதிவாளரிடம் முத்திரைத்தீர்வு சட்டம் 47ன் கீழ் வழிக்காட்டு மதிப்பீட்டை காட்டிலும் விலைகுறைவாக பதிவுசெய்ய வாய்ப்பிருக்கிறது. கடந்தாண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்தி 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆவனங்களை சென்னை மற்றும் கோவை யில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி கள், 9 இடங்களில் உள்ள துணை ஆட்சி யர்கள் தகுதியான முறையில் வெளிப் படையான முறையில் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட நபர்களை வரவழைத்து ஆணை பிறப்பிப்பார்கள். 

கே.தங்கவேல்: மேல்முறையிட்டிற்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்கிறபோது மேல் முறையீடே அந்த அதிகாரிகளிடம் தான் செய்யவேண்டியுள்ளது. எனவே அதற்கான முறையில் வழிக்காட்டுமுறை கள் பொதுமக்கள் பிரதிநிதிகள், பஞ் சாயத்து, நுகர்வோர் பிரதிநிதிகளை கொண்டு ஒரு அமைப்பு ஏற்படுத்தி தீர்வு காணவேண்டும்.

அமைச்சர் ரமணா: சென்னை மற்றும் கோவையில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரிகள், 9 இடங்களில் உள்ள துணை ஆட்சியர்கள் ஆகியோர் ஆய்வு நடத்திய பின்னரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் கள் மாநில பத்திரபதிவுத்துறை தலைவர் தலைமையில் உள்ள குழுவில் மேல்முறை யீடு செய்யலாம். அதிலும் பாதிக்கப்பட் டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.

கே.தங்கவேல்: தவறாக மேற்கொண்ட பத்திரப் பதிவை ரத்து செய்யவும், அதற்கு துணை போனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட பதிவாளருக்கு அதிகாரமளிக்கும் வகையில், கேரளாவில் உள்ளதைப் போல, பிரிவு 55இல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். காலி யாக உள்ள மாவட்ட பதிவாளர் பணியிடங் கள் 54, சார் பதிவாளர் பணியிடங்கள் 84 ஆகியவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் ஆவண எழுத் தர் நலவாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டதுடன் கிடப் பில் போட்டுவிட்டது. (அரசாணை 183 நாள் 28.10.2010) தமிழக அரசு இப்பிரச் சனையை கணக்கிலெடுத்து நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். உரிமம் பெற்ற பத் திர எழுத்தர்களின் பட்டியலை ஒவ் வொரு அலுவலகத்திலும் எழுதி வைக்க வேண்டும். அவர்கள் மட்டும் பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். தேவை யான இடங்களில் பத்திர எழுத்தர்களை நியமிக்க வேண்டும். வட்ட தலைநகரங் களில் பத்திரபதிவு அலுவலகங்கள் தொடங்கிட வேண்டும்.இவ்வாறு கே. தங்கவேல் பேசினார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)