Monday 6 May 2013

வரியல்லாத வருவாயை உயர்த்தி, பொது முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்!


தமிழக சட்டமன்றத்தில் வணிகவரி, பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கெடுத்து பேசிய கே.தங்கவேல் எம்.எல்.ஏ “வரியல்லாத வருவாய்களை பெருக்கி, பொது முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
அவர் உரையின் ஒரு பகுதி:
கே.தங்கவேல்: மாநிலத்தில் அதிகரித்துவரும் பண வீக்கத்தையும், குறைந்துள்ள பொருளாதார வளர்ச்சியையும் எதிர்கொள்ள மேம்போக்கான நடவடிக்கைகள் போதாதென நிதி நிலை அறிக்கையில் சரியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை தமிழகத்தில் மட்டும் ஏற்பட்டிருப்பதல்ல. உலகப் பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக - இந்தியாவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் தாக்கம் தமிழகம் வரை நீண்டிருக்கிறது.
உலகமயத்தை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு, பொருளாதார சீர்திருத்தங்களின் பெயரால் மேற்கொண்ட சீரழிவு நடவடிக்கைகள் இந்த மந்த நிலைக்கு துணைபோயுள்ளன. வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறைகள்அந்நிய மூலதனத்தின் கைகளில் ஒப்படைக்கும் முயற்சியை இடதுசாரிகள் போராடித் தடுத்தார்கள். அதனால்தான், உலக நெருக்கடியிலிருந்து இந்தியா ஓரளவு தப்பித்தது என்பதை பொருளாதார வல்லுனர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
இன்றும் தனது சீரழிவு சீர்திருத்தங்களை மத்திய அரசு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சில்லரை வர்த்தகத்தில் வால்மார்ட் போன்ற அன்னிய பெரு நிறுவனங்களுக்கு எதிரான நிலையெடுத்துள்ள தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம்.
மத்திய அரசிலிருந்து மாறுபட்ட கண்ணோட்டத்தோடுமாநில அரசு செயல்பட்டு, மக்கள் மீதான சுமைகளைக் குறைத்திட முயல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
நிதிச் சிக்கனம் என்ற பெயரில் செலவுகளை குறைத்துக் கொள்வதும், தனியார் முதலீடுகளுக்கு சலுகைகள் கொடுப்பதும், நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்வதும் மட்டும் இப்போதுள்ள சூழலில் போதுமானதல்ல. கேந்திரமான துறைகளில் பொது முதலீட்டை உயர்த்துவதும், சிறு தொழில்களை ஊக்கப்படுத்துவதும், ஒவ்வொரு குடும்பங்களின் வருவாயையும் பெருக்கும் விதத்தில் திட்டங்கள் தீட்டுவதும் அவசியம். தனியார் முறைகேடாக கொள்ளை லாபமடிக்கும் கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்கள், ஆற்று மணல் சில்லரை விற்பனைகளில்  அரசே இறங்குவதன் மூலம் வரியல்லாத வருவாயை உயர்த்தி, அதனை பொது முதலீடுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார். (அவர் பேசிய முழு உரையும் விவாதமும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்)

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)