பத்திரப் பதிவுத் துறையிலும் தனியார் அவுட் சோர்சிங் அனுமதிக்கும் முறைக்கு கே.தங்கவேல் எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் சட்டமன்றத்தில் பேசியதும். அது தொடர்பாக அமைச்சர் அளித்த பதிலும் பின்வருமாறு:
கே.தங்கவேல்: ஆன் லைன் முறையில் கணினிகளை இணைக்கும் பணியில் ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட் டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. ரகசிய ஆவணங்களை நிர்வகிக்கும் பணியில் தனியாரை ஈடுபடுத்துவது நல்ல விளைவு களை ஏற்படுத்தாது. கேரளாவில் பதிவுத் துறையின் தனியார்மயம் புகுத்தப்பட்டு எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ள அனு பவத்தைக் கணக்கிலெடுக்க வேண்டும்.
அமைச்சர் ரமணா: பதிவுத்துறை யில் கணினிமயமாக்கும் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ள கோரப்பட்டுள்ளன. மென் பொருள், வன்பொருள் போன்ற பணிகள் ஒப்பந்தப்புள்ளியில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ஆனால் ரகசியம் காக்கப்படும் பணிகள் மட்டும் பதிவுத்துறை மூலமாகத்தான் செய்யப்படும்.
கே.தங்கவேல்: தகவல் தொழில் நுட்ப பணிகளை தனியாரைக் கொண்டு செய்வதால் பண விரயமும், பிழைகளும் அதிகமாக வாய்ப்புள்ளது. திறமையான கணினி பொறியாளர்களைக் கொண்டு தமிழக அரசே தகவல் தொழில்நுட்ப மேம் பாடுகளைச் செயல்படுத்த வேண்டும். 150 ஆண்டுகள் வரை பழமையான ஆவணங்கள் இத்துறையில் பராமரிக்கப் படுகின்றன. இவற்றை ஆவணப் பாது காப்பகங்கள் ஏற்படுத்தி பராமரிக்க வேண் டும். இதில் டிஜிட்டல் முறையை புகுத்து வது பணிகளை எளிதாக்கும் என்ற போதி லும், தகவல் திருட்டு, வைரஸ் பாதிப்பு உள் ளிட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கும் வாய்ப்பிருப்பதால் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளும், ஆவணங்களின் அச்சுப் பிரதிகளை பாதுகாக்கும் முறை தொடர வேண்டும்.
முழு உரை: பதிவுத்துறையில் தனியார்மயம் ஆபத்து!
0 கருத்துகள்:
Post a Comment