Thursday, 12 December 2013

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துக! திருப்பூர் மக்கள் கோரிக்கை மாநாடு!

மாவட்டத் தலைநகரமாக தரம் உயர்ந்துள்ள திருப்பூரில் சுகாதாரத்தைப் பலப்படுத்த மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை அதிநவீன கருவிகளுடன், அனைத்து சிறப்புப் பிரிவு மருத்துவர்கள் செயல்படும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய திருப்பூர் மாநகர மக்கள் கோரிக்கை மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் அரிசிக் கடை வீதியில் செவ்வாயன்று மாலை நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் வரவேற்றார். இந்த மாநாட்டில் திருப்பூர் மாநகர மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம்எல்ஏ பணிகள் சிறு நூல் வெளியீடு : இம்மாநாட்டில், கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் திருப்பூர் தெற்குத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் செய்திருக்கும் பணிகள் குறித்து, “கே.தங்கவேல் எம்எல்ஏவின் மக்கள் பணிகள்” என்ற சிறு நூலை மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.
அதை மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் பெற்றுக் கொண்டார். தொகுதி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இந்த சிறுநூலை கொண்டு சேர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டிருக்கும் பணியை விளக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, தேவையான மருத்துவ ஊழியர்களை நியமித்து அனைத்து நவீன மருத்துவ சிகிச்சைக்குரிய வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஞாயிறு விடுமுறையை உறுதி செய்வதுடன், அடுக்குமாடி குடியிருப்பு, இருபால் தொழிலாளர் தங்கும் விடுதிகள் ஏற்படுத்த வேண்டும், நகரின் பேக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துவது, கட்டி முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பாலங்களை கட்டி முடிப்பது, இங்குள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக்குகள் உருவாக்குவது, அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டு காலமாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது உள்ளிட்ட பணிகலை தமிழக அரசும், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.
மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம் வழிமொழிய பலத்த கரவொலியோடு இத் தீர்மானம் நிறைவேறியது.இந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் ஆகியோர் உரையாற்றினர். திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ நன்றி கூறினார்.

(நன்றி: தீக்கதிர், தினகரன், தினமலர், தினத் தந்தி, தி இந்து மற்றும் The Hindu)

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)