Thursday 12 December 2013

அதிகாரிகள் ஜனநாயக அடிப்படையில் செயல்பட வேண்டும்: கே.தங்கவேல் MLA கண்டிப்பு ...



10/12/2013 அன்று திருப்பூர் மக்கள் கோரிக்கை மாநாட்டில் கே.தங்கவேல் எம்எல்ஏ பேசும்போது கூறியதாவது: 

திருப்பூரில் மாநகரக் காவல் துறை அமைந்துள்ள நிலையில் காவலர்களின் நடவடிக்கை அத்துமீறும் விதத்தில் அமைந்துள்ளது.
 
குடிநீருக்காகப் போராடும் மக்களின் குடங்களை எட்டி உதைப்பது, தட்டியைக் கிழிப்பது என செயல்படுகின்றனர். இது காவல் துறைக்கு வீரமல்ல, அழகுமல்ல. எத்தனையோ கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை சாமானிய மக்கள், அரசியல் இயக்கங்களிடம் வீரத்தைக் காட்டுவது அவர்களது மரியாதையை உயர்த்தாது. 
மாநாட்டிற்காக தட்டி கட்டினால் அதை பறித்துச் செல்கின்றனர் என்று கட்சி ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இது பற்றி துணை ஆணையரிடம் பேசியபோது ஒன்றும் பிரச்சனை இல்லை, இனி அப்படி நடக்காது என்று உறுதி கூறினார். ஆனால் அதன் பிறகும் கட்சி ஊழியர்கள் கட்டிய தட்டிகளை பறித்துச் சென்றனர். இந்த காவல் துறையினர் ஆளும் கட்சியினர் கட்டும் தட்டிகளுக்கும் இது போல் நடவடிக்கை எடுப்பார்களா?
அழைப்பில்லை!
திருப்பூரில் நடைபெறும் விழாக்களுக்கு அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை. அழைப்பு தருவதில்லை. தெற்கு தாலுகா அலுவலகம் அமைப்பதற்கு இடத்தைப் பார்வையிட அமைச்சர் செல்கிறார், மேயர் செல்கிறார், மண்டலத் தலைவர் செல்கிறார், வார்டு கவுன்சிலர் செல்கிறார். ஆனால் திருப்பூர் தெற்கு தாலுகா அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்த எனக்குத் தகவல் இல்லை. என்னை அழைக்கவில்லை. 
உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும். சில சமயம் அதிகாரிகள் தகவல் சொல்வது நிகழ்ச்சிக்கு அழைப்பது போலவும் இருக்க  வேண்டும், நான் அதில் பங்கேற்கவும் கூடாது என்பது போல செயல்படுகிறார்கள். இது சரியல்ல. அதிகாரிகளின் போக்கு இனியும் இப்படி தொடருமானால் இனி என்ன செய்வதென்று யோசிக்க வேண்டியிருக்கும்.
திருப்பூர் மாநகரில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஜனநாயக அமைப்புகளை மதிக்கக்கூடியதாக அதிகாரிகளின் செயல்பாடு இல்லை. இங்குள்ள பிரத்யோகமான நிலையை புரிந்து கொண்டு நகர நலன், மக்கள் நலனுக்கு ஏற்பச்  செயல்பட வேண்டும். 
மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமின்றி ஜனநாயக இயக்கங்களும் போராடுகிறபோதுதான் அதிகாரிகளுக்கு உணர்த்த முடியும். போராட்டங்கள் மூலம் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று கே.தங்கவேல் எம்எல்ஏ கூறினார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)