Friday 27 June 2014

திருப்பூர் மாநகராட்சி தொழிலாளர் ஊதிய உயர்வு: அமைச்சருடன் எம்எல்ஏ சந்திப்பு



கோவை, ஜூன். 22 - திருப்பூர் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிதொழிலாளர்களுக்குஊதிய உயர்வு குறித்த கோரிக்கை மனுவை உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ கே.தங்கவேல்அளித்தார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கோவைமைல்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.. ஞாயிறன்று சந்தித்தார்.அப்போது திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சிஉள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் கோரிக்கைமனுவை அமைச்சரிடம் அளித்தார். கோரிக்கைமனுவில் தெரிவித்திருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளின் குடிநீர் பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஆகிய 223 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் பணிபுரியும்குடிநீர் பணியாளர்கள் 14 பேருக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நல்லூர் பகுதியைச்சேர்ந்த 5 ஓட்டுநர்களுக்கு தினசரி ஊதியமாக 225ரூபாயும் மற்ற 204 தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ 2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இன்றைய விலைவாசி நிலையில் இந்த குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு கடுமையான சிரமத்துடன்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கால நேரம்பார்க்காமல் தொய்வின்றி தங்களது பணியை தொடரும் இவர்களை மாநகராட்சி ஊழியர்களாக தரம் உயர்த்தி கடந்த 2012ல் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இதுவரையில் அது நடைமுறைக்கு வரவில்லை.

இது குறித்துசங்கத்தின் சார்பில் மாநகராட்சி ஊழியர்களாக தரம் உயர்த்திடவும், ஊதிய உயர்வு வழங்கிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இந்நிலையில தமிழக அரசின் நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல் துறை நிர்வாக ஆணையாளர் உத்தரவுப்படி கடந்த 2013 டிசம்பர் 31 ஆம் தேதி 223 தொழிலாளர்களும் மாநகராட்சி ஊழியர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் ஊதியஉயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாக ஊதிய உயர்வு கிடைக்காமல் உள்ள இந்த தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வை வழங்கிட அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது கே.தங்கவேல் எம்எல்ஏவுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், எஸ்.கருப்பையாமற்றும் திருப்பூர் மாவட்டஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பி.பழனிச்சாமி,மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.


0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)