Friday 18 July 2014

ரேசன் அட்டை வழங்குவதற்கு ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பு: சிறப்பு கவனமெடுக்க எம்.எல்.ஏ வற்புருத்தல் ...

புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களை ஆண்டுக்கணகில் இழுத்தடிப்பது குறித்து கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், இப்பிரச்சனைக்கு தீர்வு காண அரசு சிறப்பு கவனமெடுக்கவேண்டுமென்றார்.

இது தொடர்பாக நேற்று, கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ கே.தங்கவேல் எழுப்பிய வினாக்களும், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதில்களும் வருமாறு:

கே.தங்கவேல்: புதிய குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தவர்களுக்கென சிறப்புமுகாம்கள் நடத்த அரசு ஆவன செய்யுமா?

உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் : விண்ணப்பித்தவர்களில் குடும்ப அட்டை பெற தகுதி உள்ளவர்களுக்கு 2 மாதத்திற்குள்புதிய குடும்ப அட்டைவழங்கப்படுகிறது. சென்னையில் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையிலும்,ஏனைய மாவட்டங்களில்மாதத்தின் இரண்டாம்வெள்ளிக்கிழமையிலும் நடைபெறும் குறை தீர்ப்புமுகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய காலத்திற்குள் தீர்வு செய்யப்படுகிறது. எனவே, சிறப்புமுகாம்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

கே.தங்கவேல்: திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 25 ஆயிரம் மனுக்கள் குடும்ப அட்டைகோரி விண்ணப்பிக்கப்படுகிறது. இதில் சரிபாதி திருப்பூர் வட்டத்தில் இருந்து மட்டும் விண்ணப்பிக்கப்படுகிறது. திருப்பூர் தொழில் வளர்ச்சி,மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப நிர்வாக வசதிஇல்லை. குடும்ப அட்டைகேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 1 முதல் 4 ஆண்டுகளாகியும் வழங்கப்படாமல் உள்ளது. திருப்பூர் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டிருந்தாலும் போதியஊழியர்கள் இல்லை.உரிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் உள்ளது.திருப்பூருக்கான குடும்பஅட்டைகள் கோவையில் அச்சடிக்கப்படுகிறது.அதனை மேற்பார்வையிட வேண்டிய அதிகாரி ஈரோட்டில் இருக்கிறார். இதுபோன்ற நிர்வாக பிரச்சனைகளை சரி செய்து புதிய அட்டைகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அமைச்சர்: உறுப்பினர் அவைக்கு தவறான தகவலை தெரிவிக்கிறார். புதிய குடும்ப அட்டைகளுக்கு உரியஆவனத்துடன் விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் ஆய்வு செய்து வழங்கப்படுகிறது. திருப்பூரில் 1.6.2011 முதல் 30.6.2014 வரையில் 57 ஆயிரத்து 638 மனுக்கள் வந்துள்ளன. இவற்றில் 56 ஆயிரத்து 605 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 46 ஆயிரத்து 749 மனுக்கள் குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவனங்கள் இல்லாததால் 9 ஆயிரத்து 856 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எஞ்சியுள்ள 1033 மனுக்கள் விசாணையில் உள்ளன. 60 நாட்களுக்கு மேல்ஒரு மனு கூட இல்லை.இதில்கூட ஒரு மாத நிலையில்தான் 1033 மனுக்களும் உள்ளன. திருப்பூரில் ஏற்கெனவே 28 ஆயிரத்து 294 குடும்ப அட்டைகள் இருந்தன. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக 14 ஆயிரத்து 5 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன

கே.தங்கவேல்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மகன் பாரதி குடும்ப அட்டை கேட்டு மனுத்தாக்கல் செய்து 6 மாதமாகிறது. 2 முறை வட்டாட்சியரிடம் பேசிஇருக்கிறேன். பாரதி அவரது மனைவி ஆகியோரின் ஆவனங்கள் சமர்பித்தும் குடும்ப அட்டை வழங்கப்படாமல் உள்ளது. அதிகாரிகள் சொல்வது முழுவதும் உண்மையா என அமைச்சர் பார்க்க வேண்டும்.தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வந்துதிருப்பூரில் குடியேறியவர்கள் ஆவணங்களுடன்விண்ணப்பித்தாலும் குடும்ப அட்டை கிடைப்பதில்லை. அமைச்சர் அதனைஆய்வு செய்யவேண்டும். 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுப்பதில்லை.

அமைச்சர்: உறுப்பினர் குறிப்பிடுகிறவர் ஆவனங்களை முழுமையாக சமர்ப்பித்திருக்க மாட்டார். குடும்பஅட்டைக்கு விண்ணப்பிக்கும்போது பழைய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான சான்று, 5 ஆண்டுகள்ஒரே இடத்தில் இருந்துகுடும்ப அட்டை பெறாததற்கு காரணம், வாக்காளர் அடையாள அட்டை,முந்தைய குடும்ப அட்டைஒப்படைப்பு சான்றுஆகியவற்றை வழங்க வேண்டும். உறுப்பினரின் புகார் குறித்து விசாரிக்கப்படும்.அரசின் விலையில்லா பொருட்களை பெறுவதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறுபெயர்களில் விண்ணப்பிக்கின்றனர். இதனால் பலருக்கு குடும்ப அட்டைவழங்க முடியவில்லை.பின்னர் பேசிய அமைச்சர், பாரதிக்கு குடும்ப அட்டை 10.2.2014 அன்று வழங்கப்பட்டு விட்டதுஎன்றார். ஆனால், விண்ணப்பித்து எத்தனை நாட்களாகி வழங்கப்பட்டது என்ற விபரத்தை அவர் குறிப்பிடவில்லை.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)