Friday 1 August 2014

தாமதமாகும் இ.எஸ்.ஐ மருத்துவமனை: எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் கேள்வி !

வெள்ளியன்று (ஆக.1) கேள்வி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி உறுப்பினர் கே.தங்கவேல் எழுப்பிய வினாக்களும், அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு:

கே.தங்கவேல்: திருப்பூரில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருத்துவமனை கட்டிடம் கட்ட அரசு ஆவன செய்யுமா?

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன்: திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்கு கட்டட வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. அந்த வரைபடத்தை தொழிலாளர் மாநில காப்புறுத்திக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணி தொடங்கும்.

கே.தங்கவேல்: திருப்பூர் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்துவந்து தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இஎஸ்ஐ மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனில் கோவைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட இடம் தேர்வுசெய்யப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பணி தொடங்கப்படவில்லை. விரைவாக பணிகளை முடித்து 100 படுக்கை கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படுமா? எப்போது மருத்துவமனை கட்டும் பணி தொடங்கும்?

அமைச்சர்: இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 11 கோடியே 90 லட்சத்து 77ஆயிரத்து 566 ரூபாய் மதிப்பில் இடம் வாங்கப்பட்டது. முதல்கட்டமாக நவம்பர் மாதம் முதல் 72 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தபணி விரைவாக முடிக்கப்படும்.

கே.தங்கவேல்: சுற்றுச்சுவர் அமைக்கும் இடத்தை சிலர் சொந்தம் கொண்டாடி கட்டுமானப் பணிகளை தடுத்துநிறுத்தி, நீதிமன்ற வழக்கிற்கு சென்றுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்குவழக்கை தொடுத்தவர்களும் வராமல், அரசு அதிகாரிகளும் செல்லாமல் வழக்கு முடியாமல் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து கட்டிடம் கட்டும் பணியை விரைவாக தொடங்கப்படுமா?

அமைச்சர்: வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, விரைவாக பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.வால்பாறையில் இஎஸ்ஐ மருந்தகம்?அப்போது துணைக்கேள்வி எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை தொகுதிஉறுப்பினர் எம்.ஆறுமுகம், விதி 110ன் கீழ் வால்பாறையில் இஎஸ்ஐமருந்தகம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். எப்போது மருந்தகம் அமைக்கப்படும்? திருப்பூரில் தொழிலாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்காத குறைபாடுஉள்ளது. அது சரிசெய்யப்படுமா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மருந்தகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிட பணி விரைவில் தொடங்கும் என்றார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)