மாநில நெடுஞ்சாலைகளை உலகத் தரத்தில் உயர்த்த எடுத்துக்கொண் டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது. இந்தத் திட்டம் இதுவரை இல்லாத அளவில் வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்று நிறைவேற்றப்படும் எனவும், மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் மேலாண்மை செய்யப்படும் என் றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தைப் போல செயல்பட்டு சுங்க வசூ லுக்கும், விலையேற்றத்துக்கும் வழி வகுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. சாலைப் பராமரிப்பு போன்ற - நிரந்தர கவனிப்பு தேவைப்படும் பணி களை அரசே மேற்கொள்வதுதான் பொருத்த மாக இருக்கும். தனியாக ஆணையம் ஏற்படுத்துவது தேவையற்றது.
அமைச்சர் பழனிச்சாமி: தமிழ கத்தில் 28ஆயிரத்தி 12 மாவட்டச் சாலை களும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன. மிகக் குறைந்த சாலைகளே இந்த ஆணையத்தின் கீழ் எடுக்கப்பட வுள்ளது.
அதிக வாகனங்கள் செல் லும் சாலைகள் எடுக்கப்பட்டு உலகத் தரத்திற்கு இந்த சாலைகள் மேம்படுத் தப்படும். தமிழ்நாட்டில் 57ஆயிரத்தி 43கி.மீ நீளமுள்ள சாலைகளை தமிழக அரசு பாரமரித்து வருகிறது. ஆனால் 5ஆயிரம் கி.மீ சாலைகள் எல்லாம் அதிக போக்குவரத்து உள்ளசாலை களும் அதிக விபத்துக்களும் ஏற்படும் சாலைகளுமாகும். விபத்துகள் ஏற் படாமல் 4வழிச்சாலைகள் 6வழிச் சாலைகளை ஏற்படுத்ததான் மாநில நெடுஞ்சாலை ஆணையம் ஏற்படுத் தப்பட்டுள்ளது.
கே. தங்கவேல்: தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்திடம் ஒப்ப டைத்து அவர்கள் 8 ஆண்டுகளாக, பராமரிக்காமல் விட்ட சாலைகளை தமிழக அரசு திரும்ப கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப் பது நல்ல முடிவாகும். கடந்த திமுக ஆட்சியில் ஊரக சாலைகள். நெடுஞ் சாலைத்துறையின் கீழ் இருந்த கிராம சாலைகள் -பிரிவு கடந்த திமுக ஆட்சி யில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மாற்றப் பட்டது. இந்த சாலைகளை மீண்டும் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் மாற்ற வேண்டும்.சாலைப் பராமரிப்பை ஐந்தாண்டு களுக்கு தனியாருக்கு ஒப்பந்தத்தில் விட எடுத்துள்ள முடிவு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
அமைச்சர் பழனிச்சாமி: பரீட் சார்த்தமாக தான் இந்த சாலைகளை தனியாரிடம் விட அரசு திட்டமிட் டுள்ளது. அதில் எந்த அளவுக்கு முன் னேற்றம் இருக்கிறதோ அதை பொறுத்து தான் மற்ற கோட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும். தனியாரிடம் சாலை களை ஒப்படைக்கும் போது அவர் கள் ஒரே சீராக சாலைகளை போடு வார்கள். 5ஆண்டுகளும் அதை பாரா மரிப்பார்கள். ஆனால் ஒப்பந்தக்காரர் களிடம் சாலைகளை போடும் போது அவர்கள் பணி முடிந்த பின்னர் அப் படியே விட்டு விடுவார்கள். பின்னர் சாலைகள் சேதமடைந்தாலும் அரசு தான் அதை சரிசெய்யவேண்டியுள் ளது.
கே. தங்கவேல்: பரீட்சார்த்த முறை யில் சாலைகளை தனியாரிடம் அளிப்ப தாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு முன்னால் பேசிய அதிமுக உறுப்பினர் இதை தமிழகம் முழுவதும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். அதனால் தான் இது பரீட்சார்த் தமா அல்லது மாநில முழுவதுமா ? என்று கேட்க வேண்டி யுள்ளது. ஏற் கனவே, தருமபுரி கிருஷ்ண கிரி ஈரோடு கோட்டங்களில்கீழ் இருந்த குறிப் பிட்ட சாலைகளை உலக வங்கி நிதி உதவியில் பராமரிக்க வெங்கடேஸ் வரா கன்ஸ்ட்ரைன்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந் தம் பலனளிக் கவில்லை. பொள்ளாச்சி உபகோட் டத்தில் செயல்படுத்தப் படும் திட்ட மும், அரசுப் பொறியாளர் களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டுள் ளது. அர சிடம் இருக்கும் சமூகப் பொறுப்பு ணர்வை தனியாரிடம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்.
அமைச்சர் பழனிச்சாமி: தனி யாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் களின் மேற்பார்வையில் தான் இந்த பணிகள் நடைபெறும்.
0 கருத்துகள்:
Post a Comment