Monday 15 April 2013

நெடுஞ்சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: கே.தங்கவேல் எம்.எல்.ஏ (முழு உரை)


சென்னை, ஏப். 15-
திங்களன்று (ஏப்.15) நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமுகங் கள் துறை மானியக் கோரிக்கைகள் மீது கே.தங்கவேல் MLA அவர் பேசியது வருமாறு:

தரமான சாலைகளை அமைப்ப தும், அவற்றை முறையாக பராமரிப் பதும் மாநில வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். ஆட்சிப் பொறுப் பேற்றவுடன், இன்னும் மூன்றாண்டு களில் தமிழகத்தின் சாலைகளை மேம்படுத்துவதாக முதலமைச்சர் உறுதியளித்தார்கள். அதனைக் காப் பாற்றும் வகையில் அரசு செயல்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்க ளிடம் இருக்கிறது. அந்த வகையில் நெடுஞ்சாலைத் துறைக்கான நிதி ஒதுக்கீடு சுமார் 837 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டிருப்பதை வரவேற்கி றோம். காசுள்ளவர்களுக்கு மட்டுமே தரமான வாழ்க்கை கிடைக்குமென்ற சூழல் இந்தியாவில் உருவாகியுள்ளது. 

உலகமய பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, தனியார் மயம், தாராளமயத்தை ஊக்குவித்ததன் விளைவாக அரசின் கடமைகளாகப் பார்க்கப்பட்ட கல்வி, சுகாதாரம், குடி நீர், உணவுப் பாதுகாப்பு என அனைத் தும் தனியாரைச் சார்ந்ததாக மாற்றப் பட்டு அன்னிய நிறுவனங்களுக்கு கதவு திறக்கப்பட்டு வருகிறது. நவீன யுகத் தின் அடிப்படைத் தேவைகளாக உரு வாகியுள்ள சாலைகள், மின்சாரம், சுகாதாரமான சுற்றுச் சூழல் ஆகிய வையும் பணம்படைத்தவர்களுக்கே என்ற நிலை வந்திருக்கிறது.

உதாரணமாக, மத்திய அரசு அமைத் துள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை எடுத்துக்கொண்டால். அந்த ஆணையம் சாலைகளை கவ னிப்பதை விட, மக்களின் பொருளா தாரத்தை கவனிப்பதில்தான் அக்கறை காட்டுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் போலவே, தேசிய நெடுஞ் சாலைகளில் அமைந்துள்ள சுங்க நிலையங்கள் விலைவாசி உயர்வுக்கு மறைமுகக் காரணியாக அமைந்திருக் கின்றன.

மாநில அரசின் பேருந்துக் கழகங் களையும் மத்திய அரசின் கொள்கை பாதிக்கிறது. உறுப்பினர் கே.பால கிருஷ்ணன், சென்ற முறை சுங்கச் சாவடி கள் பற்றி பேசும்போது, ஒரு பேருந் துக்கு 30 ஆயிரம் ரூபாய், 40 ஆயிரம் ரூபாய் என்று கொள்ளையடிக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது எனக் குறிப் பிட்டார். அப்போது பதிலளித்து அமைச்சர், கடந்த திமுக ஆட்சியில் 4500 கிலோமீட்டர் சாலைகள் தனி யாருக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றி யும், பேருந்து உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் வைத்துள்ள கோரிக் கைக்கு முதலமைச்சர் உரிய நடவ டிக்கை எடுப்பார் என தெரிவித்தார். 

இந்த சுங்க வசூல் ஏற்படுத்தும் சுமையி லிருந்து மக்களை பாதுகாக்கும் விதத் தில், வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்து மாற்றுச்சாலைகள் அமைக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை அமைச் சர் பழனிச்சாமி: சாலைப்போடும் போது அதற்கு ஆகும்செலவு சுங்கச் சாவடிகள் மூலம் பெறப்படுகிறது. 1997-2008 ஆம் ஆண்டு போடப்பட்ட சட்டத்தின் படி இது வசூலிக்கப் படுகிறது. 5ஆண்டுகளுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் மறு நிர்ணயம் செய் யப்படுகிறது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 36 சுங்கச்சாவடி கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சாவடிகளிலும் ஒரே சுங்க கட்டணம் வசூலிக்கவேண் டும் என்று முதலமைச்சர் உத்தரவின் பேரில் தலைமைச்செயலாளர் வாயி லாக மத்திய தரைவழிப்போக்கு வரத்துதுறை அமைச்சகத்திற்கு கடி தம் எழுதியுள்ளார். ஆனால் இது வரை அதற்கு பதிலே வரவில்லை. ஒவ் வொறு சுங்கச்சாவடிக்கும் கட்டணம் நிர்ணயித்துள்ளார்கள்.

கே.தங்கவேல்: அதே சமயத்தில் சுங்கச்சாவடி காலம் முடிந்த பின்ன ரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை போன்ற பகுதிகளில் அது தொடருகிறது. மாநில நெடுஞ்சாலைகளை உலகத் தரத்தில் உயர்த்த எடுத்துக்கொண் டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது. இந்தத் திட்டம் இதுவரை இல்லாத அளவில் வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்று நிறைவேற்றப்படும் எனவும், மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் மேலாண்மை செய்யப்படும் என் றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தைப் போல செயல்பட்டு சுங்க வசூ லுக்கும், விலையேற்றத்துக்கும் வழி வகுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. சாலைப் பராமரிப்பு போன்ற - நிரந்தர கவனிப்பு தேவைப்படும் பணி களை அரசே மேற்கொள்வதுதான் பொருத்த மாக இருக்கும். தனியாக ஆணையம் ஏற்படுத்துவது தேவையற்றது.

அமைச்சர் பழனிச்சாமி: தமிழ கத்தில் 28ஆயிரத்தி 12 மாவட்டச் சாலை களும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன. மிகக் குறைந்த சாலைகளே இந்த ஆணையத்தின் கீழ் எடுக்கப்பட வுள்ளது.

அதிக வாகனங்கள் செல் லும் சாலைகள் எடுக்கப்பட்டு உலகத் தரத்திற்கு இந்த சாலைகள் மேம்படுத் தப்படும். தமிழ்நாட்டில் 57ஆயிரத்தி 43கி.மீ நீளமுள்ள சாலைகளை தமிழக அரசு பாரமரித்து வருகிறது. ஆனால் 5ஆயிரம் கி.மீ சாலைகள் எல்லாம் அதிக போக்குவரத்து உள்ளசாலை களும் அதிக விபத்துக்களும் ஏற்படும் சாலைகளுமாகும். விபத்துகள் ஏற் படாமல் 4வழிச்சாலைகள் 6வழிச் சாலைகளை ஏற்படுத்ததான் மாநில நெடுஞ்சாலை ஆணையம் ஏற்படுத் தப்பட்டுள்ளது.

கே. தங்கவேல்: தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்திடம் ஒப்ப டைத்து அவர்கள் 8 ஆண்டுகளாக, பராமரிக்காமல் விட்ட சாலைகளை தமிழக அரசு திரும்ப கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப் பது நல்ல முடிவாகும். கடந்த திமுக ஆட்சியில் ஊரக சாலைகள். நெடுஞ் சாலைத்துறையின் கீழ் இருந்த கிராம சாலைகள் -பிரிவு கடந்த திமுக ஆட்சி யில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மாற்றப் பட்டது. இந்த சாலைகளை மீண்டும் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் மாற்ற வேண்டும்.சாலைப் பராமரிப்பை ஐந்தாண்டு களுக்கு தனியாருக்கு ஒப்பந்தத்தில் விட எடுத்துள்ள முடிவு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். 

அமைச்சர் பழனிச்சாமி: பரீட் சார்த்தமாக தான் இந்த சாலைகளை தனியாரிடம் விட அரசு திட்டமிட் டுள்ளது. அதில் எந்த அளவுக்கு முன் னேற்றம் இருக்கிறதோ அதை பொறுத்து தான் மற்ற கோட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும். தனியாரிடம் சாலை களை ஒப்படைக்கும் போது அவர் கள் ஒரே சீராக சாலைகளை போடு வார்கள். 5ஆண்டுகளும் அதை பாரா மரிப்பார்கள். ஆனால் ஒப்பந்தக்காரர் களிடம் சாலைகளை போடும் போது அவர்கள் பணி முடிந்த பின்னர் அப் படியே விட்டு விடுவார்கள். பின்னர் சாலைகள் சேதமடைந்தாலும் அரசு தான் அதை சரிசெய்யவேண்டியுள் ளது. 

கே. தங்கவேல்: பரீட்சார்த்த முறை யில் சாலைகளை தனியாரிடம் அளிப்ப தாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு முன்னால் பேசிய அதிமுக உறுப்பினர் இதை தமிழகம் முழுவதும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். அதனால் தான் இது பரீட்சார்த் தமா அல்லது மாநில முழுவதுமா ? என்று கேட்க வேண்டி யுள்ளது. ஏற் கனவே, தருமபுரி கிருஷ்ண கிரி ஈரோடு கோட்டங்களில்கீழ் இருந்த குறிப் பிட்ட சாலைகளை உலக வங்கி நிதி உதவியில் பராமரிக்க வெங்கடேஸ் வரா கன்ஸ்ட்ரைன்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந் தம் பலனளிக் கவில்லை. பொள்ளாச்சி உபகோட் டத்தில் செயல்படுத்தப் படும் திட்ட மும், அரசுப் பொறியாளர் களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டுள் ளது. அர சிடம் இருக்கும் சமூகப் பொறுப்பு ணர்வை தனியாரிடம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். 

அமைச்சர் பழனிச்சாமி: தனி யாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் களின் மேற்பார்வையில் தான் இந்த பணிகள் நடைபெறும். 

கே. தங்கவேல்: தனியார்மயத்தின் இன்னொரு மோசமான விளைவு தொழிலாளர்களை அத்துக்கூலிக ளாக வைத்திருப்பதாகும். அரசு ஒப் பந்தங்களை நிரந்தரமாகக் கோரும் நிறுவனங்கள் தங்கள் பணியாளர் களை சமூகப் பாதுகாப்பற்ற நிலையி லேயே வைத்திருக்கின்றனர். உதாரண மாக, சென்னை மெட்ரோ ரயில் கட்டு மானப் பணியில் நடந்த விபத்துக் களைப் போன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது கரணம் தப்பினால் மரணம் என்கிற ஆபத்தான நிலையில் தொழிலாளர்கள் துயரப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.நெடுஞ்சாலைகள் அனைத்தையும் ஒரே அலகாக்கி, போதுமான நிர்வா கக் கட்டமைப்பை ஏற்படுத்தி சாலை களை பராமரிக்க வேண்டும். அரசு சாலைப் பணியாளர்களின் நீண்ட காலக் கோரிக்கைக்கு செவிசாய்த்து அவர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கேட்டுக் கொள்கிறேன். வேலை நீக்கக் காலத்தில் இறந்துபோன 87 பேரில் 15 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ளவர் களுக்கும் விதிகளை தளர்த்தி வேலை வழங்க வேண்டும். வேலை நீக்க காலத் தில் அவர்கள் பெற்றிருந்த கூட்டுறவுக் கடன்களுக்கான வட்டி, அபராத வட் டியை தள்ளுபடி செய்திட வேண்டும்.

அமைச்சர் பழனிச்சாமி: பணியாற் றிய காலத்திற்கு தான் ஊதியம் வழங்க முடியும். இதை பலமுறை உறுப்பினர் கேட்டுவிட்டார். நானும் தெரிவித்து விட்டேன். எனவே அவர்களுக்கு பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க முடியாது.

கே.தங்கவேல்: உளுந்தூர் பேட்டை - சேலம் 4 வழி தேசிய நெடுஞ்சாலைக் காக சுமார் 5 ஆயிரம் விவசாயிகளி டம், 10 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்தி யுள்ளார்கள். விவசாயிகளுக்கு இழப் பீடு கொடுக்காதபோதே சாலைப் பணியை முடித்த ரிலையன்ஸ் நிறுவ னம், சுங்க வரியும் வசூலிக்க தொடங்கி யுள்ளது. இதில் அரசு விசாரணை நடத்தி முறையான இழப்பீட்டுக்கு வழி செய்ய வேண்டும்.

அமைச்சர் பழனிச்சாமி: உறுப் பினர் குறிப்பிடும் சாலை தேசிய நெடுஞ் சாலை ஆணையத்திற்கு சொந்தமான தாகும். அந்த சாலை மாநில அரசின் சாலையல்ல. எனவே உறுப்பினர் அந்த கோரிக்கையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய சாலை மேம்பாட்டு ஆணையத்திடம் வலி யுறுத்த வேண்டும். 

கே.தங்கவேல்: தஞ்சை, நாகை தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு தடையில்லாச் சான்றிதழ் கொடுக்காத காரணத்தால் பாதியில் நிற்கிறது. தடையின்மைச் சான்று வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மதுரை -கமுதி சாலையில் பைபாஸ் சாலை அமைக்கும் திட்டம் தாமதமாகிவரு கிறது. அதனை நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் பழனிச்சாமி: சேலத் தில் இருந்து திருப்பத்தூர் வரை அரூர் வழியாக 4 வழிச்சாலை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது கொள்கை விளக்ககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. 

கே. தங்கவேல்: திருவொற்றியூர் பொன்னேரி பஞ்செட்டி சாலையில் மீஞ்சூரை இணைக்கும் வகையில் இரண்டாம் கட்டமாக சாலைக் கட்டமைப்பு வளையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க இடம் ஒதுக்குவதுடன், தேசிய நெடுஞ் சாலை அருகேயுள்ள மதுக்கடை களை துரித கதியில் அகற்ற வேண்டு மென மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

சிறு துறைமுகங்கள்:

கே.தங்கவேல்: தமிழகத்தில் அரசிடம் 7 துறை முகங் கள் உள்ளன. இதில் 3 துறைமுகங் களில் மட்டுமே சரக்கு போக்குவரத் தும், இரண்டில் பயணிகள் போக்கு வரத்தும் நடைபெறுகிறது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங் களை மேம்படுத்துவதற்கு, அரசு கூடு தல் கவனமெடுக்க வேண்டும். தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டு வரும் துறைமுகங்களைப் பொருத்த மட்டில் அவை பாரம்பரிய மீன்பிடித் தளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், கடல் மாசை அதிகரிப்பதுமான அனு பவத்தைக் கணக்கிலெடுக்க வேண் டும். மேலும், தனியார் நிறுவனங் களின் ஏகபோகத்திற்கு கடல் வளம் காவுபோகாத வகையில் அவற்றின் மீதான அரசுக் கட்டுப்பாட்டை அதி கரிக்க வேண்டும்.

தமிழகத்தின், கிழக்கு கடற்கரை யோர மாவட்டங்களின் வளர்ச்சிக் கும், தமிழக ஏற்றுமதி தொழிலகங் களின் நலனுக்கும் கடல்சார் வாணிக வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டு மென்பதில் இருவேறு கருத்துக் களுக்கு இடமிருக்காது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக் குக் கூட்டணியும், அதில் அங்கமாக இருந்த திமுகவும் உறுதியுடன் செயல் பட்டிருந்தால் தமிழகத்தின் கடல்சார் வணிகத்தை பெருக்கிட ஆக்கப்பூர்வ மான காரியங்களை செய்திருக்க முடியும். இவ்விசயத்தில் பிற்போக்கு, மதவாத சக்திகளும் கைகோர்த்துக் கொண்டு தமிழகத்தை வஞ்ச்சித்து விட்டார்கள்.

(சேதுக் கால்வாய் திட்டம் குறித்து கே. தங்கவேல் சில கருத்துக்களை கூறியபோது அது உச்சநீதிமன்றத் தில் உள்ளது.
எனவே உறுப்பினர் தெரி வித்த கருத்துக்களை அவை குறிப் பில் இருந்து நீக்கவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று தங்கவேல் தெரிவித்த கருத்துக் களை அப்போது பேரவைத் தலை வர் இருக்கையில் இருந்த மாற்றுத் தலைவர் பாப்பா சுந்தரம் நீக்கினார்.)

கே.தங்கவேல் : திருப்பூரில் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக நிர்வாகச் சிக்கல்களால் கிடப்பி லுள்ள திட்டங்களை விரைவாக நிறை வேற்ற அரசு நிர்வாகங்கள் ஒருங்கி ணைந்த முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு கே.தங்கவேல் பேசி னார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)