கே.தங்கவேல்: இந்தியாவிலேயே அதிக அளவில் தொழில் வளம் பெற்ற மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அனைத்து வீடுகளும் மின் இணைப்பு பெற்றுள்ள சாதனையைப் படைத்திட்ட தமிழகம் தனிநபர் மின் நுகர்விலும் தேசிய சராசரிக்கு கூடுதலாக கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது பெரிய அளவில் மின் பற்றாக்குறையால் தவித்துவருகிறது. தமிழகம் முழுவதும் நிலவும் மின்வெட்டால் தொழில் நசிவும், வேலை இழப்பும் ஏற்பட்டும் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கிராமப்புறங்களில் 12 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு நிலவுவதால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: தமிழகத்தில் எந்தபகுதியிலும் 12 மணிநேர மின்வெட்டு இல்லை.கடந்த ஒருவாரமாக கிராமப்புறங்களில் 10 மணிநேரம் சென்னையில் 2மணிநேரம் இருந்த மின்வெட்டு நீக்கப்பட்டு எல்லா நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்வெட்டு இருந்தாலும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தனிநபர் மின்சார நுகர்வு அளவு அதிகமாக உள்ளது.மின்சார நுகர்வும் அதிகமாக உள்ளதால் மற்ற மாநிலங்களை விட நமக்கு மின்சாரத்தேவையும் அதிகமாக உள்ளது. மின்சார தேவை அதிகமாக உள்ளதால் அதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. வரும் ஜூன்மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெறும். அதற்கு ஏற்ப புயல் வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
0 கருத்துகள்:
Post a Comment