சென்னை, மே.13-
சட்டப்பேரவையில் மே.13 அன்று நடந்த கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், திருப்பூர் மாவட்டத்தில் அகல்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
![]() |
திருப்பூர் அருகே அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள் |
அதே போல, காங்கேயம் பகுதியில் 10 இடங்களிலும் உடுமலை சொங்கல் நகர் உட்பட 4 இடங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் செய்வதற்கான இடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 300 ஏக்கர் பரப்பில் இது உள்ளது இவைகளைச் சேகரித்து திருப்பூர் மாவட்டத்தில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
![]() |
கொடுமணல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டமைப்பு |
மேலும், தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், தஞ்சை அரண்மனை, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை ஆகிய இடங்களில் அகழ் வைப்பகங்கள் அமைந்துள்ளன.
திருப்பூர் மாவட்டத்தின் அருகில் உள்ள கோவை மாவட்டத்தில் தொல்லியல் துறையால் அகழ் வைப்பகம் ஒன்று இயங்கிவருகிறது. எனவே இதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.
கே.தங்கவேல்: திருப்பூர் மாவட்டத்தில் கல்வெட்டுக்கள், சுவர் ஓவியங்கள் ஏராளம் உள்ளன. அவைகளை கவனத்தில் கொண்டு இந்த மாவட்டத்திற்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்க அரசு ஆய்வு செய்து, மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
அமைச்சர் வைகைச் செல்வன்: தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 14 அகழ் வைப்பகங்கள் உள்ளன. அவை, தேனிசைக்கோட்டை, ஆழ்கடல் (நாகை), கங்கைகொண்ட சோழ புரம் (அரியலூர்), ராமலிங்கவிலாஸ் (ராமநாதபுரம்), ஆற்காடு அகழ்வைப்பகம் (வேலூர்), வரலாற்றுக்கு முந்தைய கால அகழ்வைப்பகம் (திருவள்ளூர்), திருமலை நாயக்கர் அரண்மனை (மதுரை), ராஜராஜன் மராட்டா (தஞ்சாவூர்), குற்றாலம் (திருநெல்வேலி), திருக்கோவிலூர் (விழுப்புரம்), தருமபுரி, கரூர், கோவை ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சான்றுகள், பிற்கால ஈமச் சின்னங்கள், கல்வெட்டுக்கள், மணல் மேடுகள் கிடைக்கப்பெற்றால் - எதிர்காலத்தில் துறை சார்பில் கருத்தாய்வு செய்து - முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.
0 கருத்துகள்:
Post a Comment