கே.தங்கவேல்: மின் தேவைகளை பூர்த்தி செய்திட உடனடி நடவடிக்கைகள் அவசியம் மின் பற்றாக்குறையை சீராக பகிர்ந்துகொள்ளாததால் மாநிலத்திற்குள்ளாகவே சமச்சீரற்ற தொழில் சூழல் நிலவுகிறது. சென்னையில் செயல்படும் ஒரு நிறுவனத்துடன் மாநிலத்தின் இதர பகுதியில் செயல்படும் நிறுவனங்கள் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. இதனை மாற்ற வேண்டும். மின்வெட்டு தொடரும் காலத்தில் - மின் ஆக்கி (ஜெனரேட்டர்) மூலம் மின் உற்பத்தி செய்திட ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்ட டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும். விவசாய இணைப்பு கோரிய 6 லட்சம் விண்ணப்பங்களுக்கு இணைப்பு வழங்க வேண்டும்.
தொழில்துறை அமைச்சர் தங்கமணி: சென்னையைபோல் மற்ற பகுதிகளில் சமச்சீரான தொழில்வளர்ச்சி இல்லை என்று உறுப்பினர் கூறுகிறார். தென் மாவட்டங்களில் தொழில்வளர்ச்சி குறைவாக இருப்பதாக நீங்கள் கூறினீர்கள். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தென் மாவட்டங்களில் தொழில்துவங்கவேண்டும் என்பதற்காக பல சலுகைகளை அறிவித்துள்ளார். இதனால் சமச்சீரான தொழில்வளர்ச்சி ஏற்படும். 9 மாவட்டங்களில் தொழில்துவங்க முன்வருவோருக்கு 50 விழுக்காடு மானிய விலையில் இடம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல சலுகைகளை முதல்வர் அறிவித்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment