Monday 13 October 2014

தொழிற்சங்கங்கள் கிளர்ந்தெழுந்து மக்களை அணிதிரட்ட வேண்டும்!: எம்.எல்.ஏ. அறைகூவல்

திருப்பூர், அக்.12-நவீன தாக்குதல்களை எதிர் கொள்ள அணிதிரட்டப்படாத தொழிலாளர்களையும், அனைத்துப் பகுதி மக்களையும் சேர்த்து தொழிற் சங்கங்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., கூறினார்.
திருப்பூரில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (என்.எப்.பி.இ.) தபால் காரர் மற்றும் எம்.டி.எஸ். ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு அக்டோபர் 10, 11 தேதிகளில் நடைபெற்றது.கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாநாட் டை வாழ்த்திப் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:தேசத்தின் மொத்த உற்பத்தியில் 60 சதவிகிதத்திற்கு மேல் முறை சாரா தொழிலாளர்களின் பங்களிப்பாக உள்ளது. பிரதான உற்பத்தித் துறை மட்டுமின்றி கல்வி, மருத் துவத்திலும் தனியார்மயம் திணிக்கப் பட்டுள்ளது.நாட்டை ஆண்ட முந்தைய காங்கிரஸ் அரசும், இப்போது ஆளும்பாரதிய ஜனதா அரசும் தனி யார் பெருமுதலாளிகளுக்கு ஆதர வான கொள்கைகளைத்தான் அமல் படுத்துகின்றன.

அவர்களுக்கு ஆதர வாக தொழிலாளர் சட்டங்களை அதில் இருக்கும் குறைந்தபட்ச உரிமை களையும் பறிப்பதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இதை எதிர்த்து தொழிற்சங்க இயக்கம் முறைசாரா தொழிலாளர்கள், அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டி வீறுகொண்டு எழ வேண்டும். அதேசமயம் நாட்டு மக்களை சாதி, மதத்தின் பேரால் கூறு போட்டு ஒன்றுபடாமல் பிரிக்கவும் கல்வி, பண்பாட்டுத் துறையில் மறைமுகமாக முயற்சி நடைபெறுகிறது.அன்னா ஹசாரே இயக்கத்தின் போது ஊழலுக்கு எதிராக நாட்டின் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து விட்டார்கள் என்று ஊடகங்கள் முழக்கமிட்டன.
இதனால் மிகப் பெரிய மாற்றம் வரப்போகிறது என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் இன்று என்ன நிலைமை? ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை எடுத்தால் இதெல்லாம் பெரிய தொகையா? 66 கோடி ரூபாய்தானே என்று சொல்லி ஊழலை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர். தீர்ப் பளித்த நீதிபதிக்கு எதிராகப் பேசு கின்றனர். யாரெல்லாம் முன்பு ஊழலுக்கு எதிராக ஆவேசமாகப் பேசி னார்களோ, அவர்களெல்லாம் இன்று இந்த ஊழலை நியாயப்படுத்தி, ஆதரித்துப் பேசுகின்றனர். ஊழ லின் ஊற்றுக்கண்ணை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் வந்த பிறகுதான் நாட்டின் வரம்பில்லாத இயற்கை வளங்களை பெரு முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க ஆட்சியாளர்கள் திறந்துவிட்டுள்ளனர். இதன் மூலம்தான் மிகப்பெரிய ஊழல்கள் நடத் தப்படுகின்றன. ஊழலுக்கு எதிராக யார் சரியாக போராடுகிறார்கள், நேர்மையாகச் செயல்படுகிறார்கள் என்பதை தொழிற்சங்க இயக்கம் காண வேண்டும் என்று அவர் குறிப் பிட்டார்.இவ்வாறு கே.தங்கவேல் எம்.எல்.ஏ., பேசினார்

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)