Thursday 5 March 2015

டெங்கு காய்ச்சலுக்கு ஓமியோபதி மருந்து அரசு மருத்துவமனைகளில் வழங்க எம்எல்ஏ கோரிக்கை


                     திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல்  தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 
"தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் சிக்குன் குனியா, பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் ஏற்பட்டு வருகின்றன.சில மாவட்டங்களில் இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கான மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்தாலும் போதுமானதாக இல்லை. நோய் தடுப்பு, விழிப்புணர்வு, நிலவேம்பு கசாயம் என மக்களுக்குக் கொடுத்தாலும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் மாற்று மருத்துவத்தையும்பயன்படுத்தலாம்.

                    சமீபத்தில் தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க ஓமியோபதி மருத்துவத்தில் “யுபடோரியம் பெர்போலியேட்டம்“ என்னும் மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலையும் குணப்படுத்த முடிந்துள்ளது. இம்மருந்தை பயன்படுத்தி மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2012 முதல் 2013ம் ஆண்டு வரை சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சைபெற்றுள்ளனர். பொருளாதாரரீதியாக குறைந்த செலவிலேயே இம்மருந்தை வழங்க முடியும் என ஓமியோபதி மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

                எனவே இத்தகைய சிறப்புவாய்ந்த ஓமியோபதி மருந்தைஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருந்தாக இலவசமாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.தங்கவேல் எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)