திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.8 லட்சத்தில் குடிநீர், கழிப்பிட வசதி
கே.தங்கவேல் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீர் மற்றும் பெண்கள் கழிப்பிடத்தை திருப்பூர் தெற்கு தொகுதிசட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் திறந்து வைத்தார்.திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 2012- 13ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், ரூ.5 லட்சத்தில் பெண்கள் கழிப்பிடமும் அமைக்க கே.தங்கவேல் எம்.எல்.ஏ, நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.இந்தப் பணிகள்நிறைவடைந்த நிலையில், வெள்ளியன்று பயனாளிகள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ கலந்து கொண்டுஇவ்விரண்டையும் திறந்து வைத்தார்.
0 கருத்துகள்:
Post a Comment