திருப்பூர் தெற்கு தொகுதியில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ.,மக்கள் சந்திப்பு பயணம்
திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. வெள்ளியன்று மக்கள் சந்திப்புப் பயணம் மேற்கொள்கிறார்.இதுகுறித்து புதனன்று திருப்பூர் தெற்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
22.05.2015 வெள்ளியன்று காலை 10 மணிக்கு ஒடக்காடு மாநகராட்சிப்பள்ளி வளாகம், 11 மணிக்கு வ.உ.சி.நகர் பிரேமா நர்சரி பள்ளி வளாகம், பகல் 12 மணிக்கு பாலமுருகன் நகர் மாநகராட்சிப் பள்ளிவளாகம், மாலை 3 மணிக்கு கொங்கணகிரி ரேசன் கடை அருகிலும், மாலை 4 மணிக்கு சரளைக்காடு ரேசன் கடை அருகிலும் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கிறார்.
அதேபோல் 24ம் தேதி ஞாயிறன்று 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்திக்கிறார். காலை 9 மணிக்கு சந்திராபுரம், 10 மணிக்கு ராஜீவ்நகர், 10.30 மணிக்கு பண்ணாரி அம்மன் நகர், சங்கர் நகர், 11 மணிக்கு செரங்காடு ஆரம்பப்பள்ளி ஆகியஇடங்களிலும், முற்பகல் 11.30 மணிக்கு சுப்ரபிரமணியம் நகர், மதியம் 12 மணிக்கு 28வது வார்டு இந்திராநகர், பிற்பகல் 4 மணிக்கு சென்னிமலைபாளையம் ஆரம்பப் பள்ளி, மாலை 5 மணிக்கு விஜயாபுரம் மேல்நிலைப் பள்ளி, மாலை 6 மணிக்கு நல்லூர் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் மக்களைச் சந்திக்கிறார்.
அடுத்ததாக, மே 25ம் தேதி திங்களன்று காலை 10 மணிக்கு 39வது வார்டு கான்வெண்டு கார்டன், 11 மணிக்கு அமர்ஜோதி நகர் பொன்நகர், மதியம்12 மணிக்கு மணியகாரம்பாளையம் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மக்களைச் சந்திக்கிறார்.இந்த சந்திப்பின்போது மாநகராட்சி மண்டல அதிகாரிகள் உடனிருப்பார்கள். எனவே மக்கள் இந்த வாய்ப்பைபயன்படுத்தி கொள்ளும்படி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

00:12
Posted in:
0 கருத்துகள்:
Post a Comment