Monday 29 June 2015

சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தாத அவலம் கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம் மக்கள் முறையீடு

சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தாத அவலம்
கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம் மக்கள் முறையீடு








திருப்பூர் நகரில் 44வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே வீதியில் கொட்டி விடுவதால் கொசுத் தொல்லை, துர்நாற்றத்தில் அவதிப்படுவதாக மக்கள் கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.செவ்வாயன்று காலை மிஷின் வீதி அங்கன்வாடி, நொய்யல் வீதி ரேசன் கடை, கோம்பைத் தோட்டம் சொர்ணபுரி லே அவுட், சத்யாநகர் விரிவு ரேசன் கடை, வெங்கடேஸ்வரா ரேசன் கடை ஆகிய பகுதிகளில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. மக்களைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, மிஷின் வீதி பகுதியில் நீரேற்றம் செய்யும் மோட்டார் அறையில் குப்பைகளை மூட்டை கட்டி வைப்பதை அகற்ற வேண்டும். சாக்கடையில் அள்ளப்படும் கழிவுகளை வீதியில் கொட்டி வைப்பதை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும். குடிநீர் குழாய் அமைந்திருக்கும் பகுதியில் சாக்கடைக்கு மேலே சிமெண்ட் சிலாப் அமைத்துத் தர வேண்டும். குண்டும், குழியுமான வீதியில் பள்ளி மாணாக்கர்கள், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை இருப்பதால் அதைச் செப்பனிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு வரக்கூடியவர்களால் ஏற்படும் தொந்தரவுகளை களையவும், வீடுகளின் முன்பாக டாஸ்மாக் மதுபானத்தை குடித்துக் கொண்டு குடிமகன்கள் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களால் பெண்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதை போக்கவும் கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து செல்லாண்டியம்மன் படித்துறை பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடப் பணிகளை கே.தங்கவேல் பார்வையிட்டார். நொய்யல் வீதி பகுதியில் இருக்கும் இறைச்சிக்கடை கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்கடைகளில் கொட்டப்படுவதால், துர்நாற்றம் ஏற்பட்டு புழுக்கள் உற்பத்தியாவதாக தெரிவித்தனர். இதனால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே இறைச்சிக் கழிவுகளை முறையாக அகற்ற உரியநடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.அதேபோல் கோம்பைத் தோட்டம் பகுதியில் மாட்டிறைச்சிக் கழிவுகளை மொத்தமாக கொண்டு வந்து கொட்டுவதையும், நொய்யல் ஆற்றங்கரையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் ஏற்படுவதையும் தெரிவித்தனர். எனவே கழிவுகளையும், குப்பைகளையும் தேங்காதவாறு உடனுக்குடன் அகற்றி தூய்மை செய்ய வேண்டினர். சத்யாநகர் பகுதியில் உள்ள தனியார் சாயத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கழிவுகளை வெளியேற்றுவது, சாயக்கழிவுகள், சாம்பல்களை இப்பகுதியில் கொட்டுவதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டையும் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இப்பகுதியில் உள்ள காலி இடத்தில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் அமைத்துத் தரவும் கோரிக்கை வைத்தனர்.வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீதியில் சாலை, சாக்கடை வசதி அமைத்துத் தரவும்இப்பகுதி பெண்கள் கேட்டுக் கொண்டனர்.
 கருவம்பாளையம், பூச்சக்காடு, செல்லம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கவேல் எம்.எல்.ஏ., இப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். அனைத்துப்பகுதிகளிலும் பிரதானமாககுடிநீர் சீராக விநியோகம் செய்ய வேண்டும். குப்பைகளையும், சாக்கடை கழிவுகளையும்அள்ளி உடனுக்குடன் அகற்றவேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கேட்டுக் கொண்டனர்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)